வடகொரியா சமீபத்தில் இராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்தியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையே உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இராணுவ தலைமையகமான பென்டகன், கடற்படை தளம் ஆகியவற்றை படம் பிடித்ததாக வடகொரியா தெரிவித்தது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் தென்கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ரொக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் தென்கொரியா செய்துள்ள ஒப்பந்தத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply