கண்டி – ஹந்தான மலைத்தொடரில் சுற்றுலாவில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருவத்துபீடத்தின் 180 மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அவர்கள் நேற்று அங்கு சென்றிருந்தனர். நேற்றிரவு குறித்த 180 மாணவர்களும் காணாமல் போனதாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது .
அவர்களில் 120 மாணவிகளும், 60 மாணவர்களும் இருந்ததாக பொலிஸார் குறிப்பிப்பட்டுள்ளனர் .
இந்தநிலையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த 6 மணித்தியால தேடுதலின் பின்னர், குறித்த 180 மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.