உழவு இயந்திரத்தில் மோதுண்டு மூன்றரை வயது குழந்தை நேற்று (05) உயிரிழந்துள்ளது.
வவுனியா நெடுங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உழவு இயந்திரத்தை பின்னோக்கி இழுக்கும் போது தந்தையின் பின்னால் நின்றுகொண்டிருந்த குறித்த குழந்தை கலப்பையில் சிக்கி படுகாயமடைந்துள்ளது.
இந்தநிலையில் படுகாயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.