தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான காணி ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை மாநகர சபைக்கு அருகாமையில் மாணவன் பயணித்த சொகுசு காரின் பாதையை வேன் ஒன்று குறுக்கே மறித்து வேனிலிருந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் குறித்த காருக்குள் ஏறி அந்தக் காரை மாணவனுடன் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply