கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி அதிகாரி ஹோட்டல் ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.

கல்முனை, வரிபத்தாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply