தன்னுடைய ஒன்பதே வயதான மகளை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அச்சிறுமியின் தந்தை, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், முல்லைத்தீவு, மாவட்டம் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.

தன்னை, தந்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டாரென, அச்சிறுமி தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் டிசெம்பர் 4ஆம் திகதியன்று முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய, அப்பெண்ணின் கணவன், அன்றையதினமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தந்தை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ​செவ்வாய்க்கிழமை (05) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply