உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் உக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.
கடந்த செவ்வாய்க்கிழமை ( 05) உக்ரைன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போது அவர்கள் உயிரிழந்ததாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மூன்று அதிகாரிகளில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் கெப்டன் ரனிஷ் ஹெவகேயும் உள்ளடங்குவார்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த உக்ரேனிய இராணுவத்தினரை வெளியேற்ற முற்பட்ட மூன்று இலங்கை அதிகாரிகள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.