யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்குள்ளாகி வருவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்று வியாழக்கிழமை (07) பார்வையிட சென்ற போது, சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் கூறியதாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply