யாழ்ப்பாணத்தில் இந்து மயானம் ஒன்றின் எரிமேடையில் இருந்த இரும்பு தூண்களை இரும்பு திருடர்கள் அபகரித்து சென்றமையால் , சடலங்களை எரியூட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்தில் எரிமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு விறகுகளை அடுக்குவதற்காக இரும்பு தூண்கள் நான்கு நடப்பட்டு இருந்தன. அவற்றினை இரும்பு திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.
அதனால் , சடலங்களை எரியூட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடியுள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.