13 வயதான சிறுமி, தன்னுடைய அம்மாவின் இரண்டாவது கணவரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை குடோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்கல்லார தெள்ளுல்ல குடியிருப்பில் வசிக்கும் பதினொரு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய தாயின் இரண்டாவது கணவர் வெள்ளிக்கிழமை (08) குடோயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
06ஆம் வகுப்பில் கல்வி கற்கும் சிறுமி தனது தாய், தங்கை, சகோதரன் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், தாய் மற்றும் சகோதரர்கள் வீட்டின் வெளியறையில், தூங்கிக்கொண்டிருக்கும் போதே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி சிறுமி தனது தாயிடம் கூறாததால் வகுப்பு ஆசிரியருக்கு தகவல் தெரியவந்துள்ள நிலையில் ஆசிரியர் பொலிஸாரிடம் புகார் செய்துள்ளார்.
மேலும் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, புத்தல பிரதேசத்தில் வசிக்கும் பெரியப்பாவின் மகனால் தான் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு
கைது செய்யப்பட்ட தாயின் இரண்டாவது கணவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.