சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது ‘நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை’, ‘உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம்’, ‘எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடக்கின்றது; நீதி இல்லை; இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம்’ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன், பல பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.