இஸ்ரேலிய படையினர் கான்யூனிசின் மையப்குதிக்குள் நுழைந்துள்ள அதேவேளை ஹமாஸ் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் தன்னிடம் உள்ள பணயக்கைதிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலிய டாங்கிகள் கான் யூனிசின் முக்கியமான வடக்கு தெற்கு வீதிக்குள் நுழைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் கிழக்கு பகுதி ஊடாக இஸ்ரேலிய படையினரின் முன்னேற்றம் கடும் மோதல் காரணமாக கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது

இஸ்ரேல் கடும்குண்டுவீச்சு தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகின்றது.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் பாலஸ்தீன கைதிகள் விடுதலை தொடர்பான தனது வேண்டுகோள்களை இஸ்;ரேல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தன்னிடம் உள்ள கைதிகள் எவரும் உயிருடன் இஸ்ரேல் திரும்பமாட்டார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

எங்களின் அனைத்து கைதிகளும் விடுதலை செய்யப்பட்டால் பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேலிய படையினரை விடுதலை செய்வோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply