இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான பாதுகாப்பு சீர்திருத்தத்தை முன்னெடுக்கவேண்டும்,வடக்குகிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரை சமாதான காலத்திற்கு ஏற்ற வகையில் குறைக்கவேண்டும் மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாசைகளிற்கு அமெரிக்காவின் ஆதரவை வெளியிடும் தீர்மானமொன்றை அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர்.
இலங்கை மக்களிற்கும் ஊழலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நீதியை நிலைநாட்டுவதற்காக ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளிற்கும் ஆதரவாக அமெரிக்க செனெட்டர்கள் இரு கட்சி தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அமெரிக்க செனெட்டர் பென்கார்டின் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் உறுப்பினர் ஜிம் ரிஸ்ஜ் காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜ்கிருஸ்ணமூர்த்தி பில்ஜோன்சன் ஆகியோர் இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாசைகளிற்கு அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்தும் இரு சபை மற்றும் இரு கட்சி தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
ஊழலிற்கு தீர்வை காண்பதன் மூலம் மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்கு நீதியை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் சுதந்திரமான நியாயமான உள்ளுராட்சி மாகாண சபை தேர்தலை உடனடியாக தாமதம் இன்றி நடத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது மக்களை செவிமடுக்கவேண்டும் மனித உரிமைகளை மதிக்கவேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் அரசியல் பொருளாதார மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டனர் அது மோசமான மனிதாபிமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை தீர்மானம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் ஊழல் நிதியை மோசமாக முகாமைத்துவம் செய்தது சட்;டத்தின் ஆட்சியின் தவறு சீனாவுடன் தொடர்புடைய கொள்ளையடிக்கும் கடன் ஆகியவையே இந்த நெருக்கடிகளை தீவிரப்படுத்தின என அமெரிக்க செனெட் உறுப்பினர்களின் தீர்மானம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் நோய்போல பரவியிருக்கும் ஊழல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஆகியவற்றிற்கு முடிவை காண்பதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கவில்லை உள்ளுராட்சி தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டதன் மூலம் ஜனநாயகத்தினை பலவீனப்படுத்தியுள்ளது எனவும் தீர்மானம் தெரிவித்துள்ளதுடன் இந்த நெருக்கடிகளிற்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்படும் பலர் இலங்கையில் சிங்கள தமிழ முஸ்லீம் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த உரிமை மீறல்கள் இலங்கையின் உள்நாட்டு யுத்த காலத்துடன் தொடர்புடையவை எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் அனைத்து இலங்கையர்களிற்கும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான சுதந்திரமாகஒன்றுகூடுவதற்கான உயிரிழந்த தங்கள் உறவுகளை அமைதியாக நினைவேந்துவதற்கு உள்ள உரிமையை மதிக்கவேண்டும்
இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான பாதுகாப்பு சீர்திருத்தத்தை முன்னெடுக்கவேண்டும்,வடக்குகிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரை சமாதான காலத்திற்கு ஏற்ற வகையில் குறைக்கவேண்டும் மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் அமெரிக்க செனெட்ட உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Virakesari