காசாவில் யுத்தநிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மனிதாபிமான தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா வாக்களித்துள்ளது.

மனிதாபிமான தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா உட்பட 152 நாடுகள் வாக்களித்துள்ளன.

கனடா நியுசிலாந்து ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

அமெரிக்கா உட்பட பத்து நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ள அதேவேளை பிரிட்டன் உட்பட 23 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன.

மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளன.

அதேவேளை எதிர்கட்சி பலவீனமான நிலைப்பாடு என வர்ணித்துள்ளது.

Share.
Leave A Reply