இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவைக்குள் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளது புகை குண்டுகளை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகை ஏற்படுத்தும் குண்டுகளை அவர்கள் உள்ளே கொண்டு வந்துள்ளனர். மறைத்து வைத்து அவர்கள் கொண்டு வந்த குண்டுகளை அவைக்குள் தூக்கி எரிந்து உள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கையில் கொண்டு வந்த அவர்கள் மக்களவைக்குள் புகுந்து கோஷங்களையும் எழுப்பி உள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் முழுக்க பாதுகாப்பானது என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கருப்பு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இல்லை: இப்படிப்பட்ட நாளில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த சம்பவம் நடந்து உள்ளது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர்.

நினைவு நாள்: இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . டிசம்பர் 13, 2001 அன்று உள்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றத்தின் அடையாள ஸ்டிக்கரின் போலி ஒட்டிய ஊர்தியில் ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.

இந்தியாவின் கருப்பு தினம் என்று அந்த நாள் அழைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலின் நினைவு நாள் இன்று. அதே நாளில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட நபரின் காலணியில் கண்ணீர் புகை குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கே மறைத்து வைத்து அவர் குண்டுகளை கொண்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு இல்லை: பார்வையாளர்கள் அரங்கிற்குள் இவர்கள் ஷூவில் இந்த புகை குண்டை மறைத்து கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து பாதுகாவலர்களை ஏமாற்றி உள்ளே எகிறி குதித்து இவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதை கலர் பாம்ஸ் என்று அழைப்பார்கள். புகை மட்டுமே வரும். ஆனால் உயிர் சேதம் ஏற்படாது. முக்கியமாக திருமணங்கள், டிஜே நிகழ்வுகளில் இதை பயன்படுத்துவார்கள். சிறியதாக 250 எம்எல் வாட்டர் பாட்டில் போல இருக்கும். இதைத்தான் மறைத்து உள்ளே கொண்டு வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த பாம் இப்போதெல்லாம் பல கடைகளில் கிடைக்கும். பெரிய ஸ்டோர்களில் கூட கிடைக்கும். ஆன்லைனில் எளிதாக வாங்க முடியும். இது விதமான சேதத்தையும் ஏற்படுத்தாது. கண்ணீர் புகை குண்டு போல இருக்கும். அதேபோல் புகை வரும். ஆனால் கண்ணீர் வராது. இது பல வண்ணங்களில் கூட கிடைக்கும். வெறும் 300 ரூபாய்க்கு 4 குண்டுகள் ஆன்லைனிலேயே கிடைக்கும். அதில் சில குண்டுகளை வாங்கி இவர்கள் நாடாளுமன்றம் உள்ளே வீசி உள்ளனர். இதுதான் அங்கே நடந்த தாக்குதலுக்கு காரணம்.

சிறியதாக இருக்கும்: இது சிறியதாக இருக்கும் என்பதால் காலில் மறைத்து வைத்து கொண்டு வரலாம். இரும்பு இல்லை என்பதால் இது மெட்டல் சோதனை கருவிகளில் மாட்டாது. அதோடு இல்லாமல் காலை பொதுவாக ஷூவிற்கு கீழே பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால்.. மாட்டவும் வாய்ப்பு குறைவு.

 

Share.
Leave A Reply