வீதியில் பயணித்த காரை வழிமறித்து காரிற்குள் இருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய தனியார் பஸ் ஒன்றின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் இரத்தினபுரி – தன்னஹென பிரதேசத்தை சேர்ந்த பஸ் சாரதியாவார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது மகளுடன் காரில் பயணித்த போது வீதியில் வந்த பஸ் ஒன்று காரை செலுத்தவிடாமல் வழி மறித்துள்ளது.

இந்நிலையில் காரை செலுத்திய பெண் பஸ்ஸை காரில் முந்திச் செல்ல முற்பட்ட போது பஸ் சாரதியினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply