குருநாகலை, தோறயாய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி 32 வயதுடைய இளைஞனுடன் காதல் வசப்பட்டிருந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு உரிய வயது வந்ததும் சிறுமியை திருமணம் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

குருநாகல், பிரியங்கரம பிரதேசத்தில் தனது மாமியுடன் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை, மாமி வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டினுள் நுழைந்து காதலன் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி கூச்சலிட்டதையடுத்து அயலர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் காதலனான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,சிறுமி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயமாக பிரியங்கரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அஸ்ஹர் இப்றாஹிம்

Share.
Leave A Reply