கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கஹவத்த – வெல்லதுர பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்ணாவார்.

இவர் தனது மகளுடன் ஒன்றாக தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவரது மகள் வேலை முடித்து வீடு திரும்பும் போது அவரது தாய் வீட்டின் பின்புறத்தில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து மகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply