தாய்லாந்தில் தொழில் வழங்குவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட 52 இலங்கையர்கள், தாய்லாந்தின் மியன்மார் எல்லையைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவினருக்கு சைபர் குற்றங்களுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த இருவரினால் இந்த இலங்கை இளைஞர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து 5,000 அமெரிக்க டொலர்களுக்கு இவர்களை பயங்கரவாத குழுவுக்கு விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த இலங்கை பணியாளர்கள் தாய்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிவதற்காக கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர், இந்த பயங்கரவாத குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply