அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை யானை – மனித மோதலினால் சுமார் 40 பேர் மற்றும் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் வலய வனவிலங்கு காப்பாளர் டபிள்யூ.எம்.கே.எஸ். சந்திரரத்ன தெரிவித்துள்ளார்.

மாவட்ட மேலதிக செயலாளர் சந்தியா என்.ஜி.,அபேசேகர தலைமையில் நடந்த இழப்பீடு குழு கூட்டத்தில் இது தெரிய வந்துள்ளது.

காட்டு யானைகளினால் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 47 பேர் அங்கவீனமடைந்துள்ளதாகவும், 710 வீடுகள் மற்றும் ஏனைய உடமைகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரை 54.9 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

49 காட்டு யானைகள் சட்டவிரோத மின்சாரப் பொறிகளால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 34 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அல்லது இயற்கையான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் வலய வனவிலங்கு காப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply