மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அவங்க பாஷை எப்போதும் அப்படிதான்.

சனாதான தர்மம் விவகாரத்தில் நான் அழிக்க வரலை, ஒழிக்க வந்துருக்கோம் என பேசினார். அவருடைய பாஷை எப்போதும் அப்படிதான்.

இப்படியெல்லாம் பேசுறவங்க அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னிக்கு பதவியில் அனுபவிக்கிறாரா?-ன்னு சொல்ல முடியுமா? கேட்க முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுக்கிறோம்.

அப்பன் வீடு என்ற பேச்சு எல்லாம் அரசியலில் நல்லது இல்லை. அவருடைய தாத்தா எப்படிப்பட்ட அறிஞர். பதவிக்கு ஏற்ற வார்த்தை நாக்கில் அளந்து வரணும்.

இதை நான் பொதுப்படையாக சொல்கிறேன். அவர் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது முன் தவணையாக டிச.12-ந்தேதி ரூ.900 கோடி மத்திய அரசு கொடுத்தது.

அது எங்க அப்பன் சொத்து, உங்க அப்பன் சொத்துன்னு சொல்ல மாட்டேன். பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். “

Share.
Leave A Reply