கிறிஸ்மஸ் காலத்தில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ள தேவாலயங்கள் 011-2472757 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகம் வரும் தேவாலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சில தேவாலயங்களுக்கு பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (24) நள்ளிரவு நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதுடன், பிரதான நத்தார் ஆராதனை புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் இன்றிரவு 11.45 மணிக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Share.
Leave A Reply