இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்­குதல் ஆரம்­பித்து எழு­பத்­தைந்து நாட்கள் கடந்து விட்­டன. தற்­பொ­ழுது இந்த தாக்­கு­தலை ஆரம்­ப­மாக கொண்டு மத்­திய கிழக்கு அர­சியல் மூலோ­பாயம் திசை நகர்த்­தப்­ப­டு­கி­றதா என்ற கேள்வி ஒன்று எழுந்­துள்­ளது.

மத்­திய கிழக்கு பூகோள அர­சி­யலில் இஸ்­ரேலின் பாது­காப்பு மீது இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, பிரான்ஸ், ஏன் இந்­தியா கூட தனது கரி­ச­னை­களை தெரி­வித்­துள்­ளன.

இஸ்­ரே­லிய பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் தரக்­கூ­டிய வகையில் மேலைத்­தேய அர­சுகள் முன் நிற்­கின்­றன.

இதற்கு புலம்­பெயர் யூதர்­களின் நிறு­வ­னங்கள் மேலை நாடு­களில் ஆளும் கட்­சி­க­ளிலும் எதிர்க்­கட்­சி­க­ளிலும் கொண்­டுள்ள செல்­வாக்கு முதன்மை வாய்ந்­தது என்றால் தவ­றில்லை.

யூத முத­லா­ளி­களின் கைகளில் இருக்கும் நிதி அதி­கா­ரமும் யூதர்­களை பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­தி­களும், ஆழ வேரூன்றி, அரச திணைக்­க­ளங்­களில் பத­வியில் இருக்கும் அதி­கா­ரி­களின் கைகளில் இருக்கும் பலமும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

இதில் முக்­கி­மான செல்­வாக்கு பிர­தான இணை­யத்­தள ஊட­கங்­களும் தொலை­காட்சி, அச்­சுப்­ப­திவு, வானொலி என பெரு­நீ­ரோட்ட ஊட­கங்­களும் கொண்­டுள்ள வலை­ய­மைப்பின் செயற்­பா­டு­களால் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது.

அர­சியல் பின்­புலம் குறித்த விவ­கா­ரங்­களில் சேக­ரிக்­கப்­பட்­டுள்ள தக­வல்கள் மேலும் வலு­கொ­டுப்­ப­தாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

பார்­வை­யா­ளர்கள் மத்­தி­யிலும், வாச­கர்கள் மத்­தி­யிலும், நேயர்கள் மத்­தி­யிலும் அதிகம் சுற்றில் விடக்­கூ­டிய செய்­திகள் ஓர் அர­சியல் தலை­வரின் விதியை நிர்­ண­யிக்க வல்­லன. இந்த வகையில் ஒவ்­வொரு பிர­தான அர­சியல் கட்­சி­களும் அவற்றின் தலை­வர்­களும் அங்­கத்­த­வர்­களும் ‘நான்’, ‘எனது பதவி’ என்­பதன் அடிப்­ப­டை­யி­லேயே செயற்­ப­டுவர் என்­பதை மைய­மாக கொண்ட மேலைத்­தேய அர­சி­யலை தெளி­வாக புரிந்து கொள்ளும் ஒரு தரு­ண­மாக இன்­றைய காலம் இருக்­கி­றது.

இது நாடு­களின் அர­சி­யலில் மாத்­தி­ர­மாக அல்­லாது, வல்­லமை மிக்க அர­சியல் தலை­மையின் ஊடாக ஐக்­கிய நாடுகள் சபை வரையில் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

உலகின் அர­சியல் மூலோ­பா­யத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய ஒவ்­வொரு அலகும் மிக நுணுக்­க­மாக நகர்த்­தப்­படும் மூலோ­பா­ய­மாகும்.

இந்த விவ­கா­ரங்­களில் இஸ்­ரே­லிய பலத்தை சர்­வ­தேச அளவில் ஆய்வு செய்­யக்­கூ­டிய பல ஆய்­வா­ளர்கள் மிக விழிப்­புடன் கவ­னித்து வருதை காணக் கூடி­ய­தாக உள்­ளது.

இந்த வகையில் மத்­திய கிழக்கில் பல­கா­ல­மாக இஸ்ரேல் தனது பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக இருக்கும் ஓர் அர­சாக குறிப்­பிட்டு வரும் ஈரானை பல­மி­ழக்க செய்­வது குறித்த நகர்­வுகள் ஆரம்­ப­மாகி உள்­ள­தாக தெரி­கி­றது. பல்­வேறு ஊட­கங்­க­ளிலும் ஈரான் மீதான அதீத குற்­றச்­சாட்­டுகள் எழுந்து வரு­கின்­றன.

சர்­வ­தேச அளவில் இரா­ஜ­தந்­திர முயற்­சிகள் மூலம் ஈரானை அணு­கு­வ­திலும் பார்க்க முழுக் குற்­றத்­தையும் ஈரான் மீது போடும் நிலை எழுந்து வரு­கி­றது.

இது 1990களில் ஈராக் இர­சா­யன அழி­வா­யு­தங்­களை தயா­ரிக்­கின்­றது என்ற பெரும் குற்றம் சுமத்­தப்­பட்ட நிலை­யுடன் ஒப்­பிட்டுப் பார்க்கக் கூடி­ய­தாகும். இறு­தியில் ஈராக்­கிடம் இருந்து எந்த ஆதா­ரங்­களும் கண்டு பிடிக்­கப்­ப­டாத நிலை ஏற்­பட்­டது.

தற்­பொ­ழுது ஈரான் மீது சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டு­களில், “ஹமாஸ் போரா­ளி­க­ளுக்கு ஈரான் நிதி உத­வியும் ஆயு­தப்­ப­யிற்­சி­களும் கொடுத்து வரு­கி­றது.

ஹமாஸ், தாக்­கு­தல்­களை ஆரம்­பிப்­ப­தற்கு முன்­பா­கவே ஈரா­னுக்கு தெரிந்­தி­ருப்­ப­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ளன என்பதாகும். அது மாத்­தி­ர­மல்­லாது அண்­மையில் சவூதி அரே­பி­யா­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் அமெ­ரிக்க ஆத­ரவில் நடத்தி வரும் பேச்­சுகள் ஈரானை விச­னத்­திற்குள் உள்­ளாக்கி விட்­டி­ருக்­கி­றது.

மேலும் இத்­த­கைய பேச்­சு­வார்த்­தைகள் சவூதி அரே­பி­யா­வுக்கு மிக விரையில் பொது மக்கள் தேவைக்­கான அணு­சக்தி திட்­டத்தை பெற்று தர வல்­லன.

அத்­துடன் சவூ­தி-­–அ­மெ­ரிக்க பாது­காப்பு உடன்­ப­டிக்­கைகள் இஸ்ரேல்- –ஹமாஸ் பேச்­சு­க­ளுக்கு வழி­வ­குக்­கலாம் என்­பது ஈரா­னுக்கு ஏற்­ற­தாக தெரியவில்லை” என்ற வகை­யிலும் செய்­தி­களும் ஆய்­வு­களும் வெளி­வ­ரு­கின்­றன.

மேற்­கு­றிப்­பிட்ட எல்லா விவ­கா­ரங்களும் நேர­டி­யாக ஈரா­னுடன் பேசி தீர்த்து கொள்­ளக்­கூ­டிய விவ­கா­ர­ங்களாக இருந்து வருகின்ற போதிலும், ஈரானை சர்­வ­தேச குற்­ற­வா­ளி­யாக நிறுத்தும் வகை­யிலும் தனி­மைப்­ப­டுத்தும் வகை­யிலும் பர­வ­லான செய்­திகள் உள்­ளன.

அதே­வேளை, அண்­மையில் சீன தலை­மையில் சவூதி அரே­பிய, ஈரா­னிய தலை­வர்கள் சந்­திப்­புகள் இடம் பெற்று வரு­வதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சீன தலை­மை­யி­லான பேச்­சுகள், இஸ்­ரே­லிய ஆத­ரவு கொண்ட மேலை­த்தேய தலை­மைத்­து­வத்­தையும் மூலோ­பாய நகர்­வு­க­ளையும் சீர் குலைக்கும் வகை­யி­லா­னது என்­பதை நினைவில் கொண்டு, ஏற்­கெ­னவே போட்டி பொரு­ளா­தார வளர்ச்­சியில் உள்ள சீனா­வுக்கும் எதி­ராக இந்­தி­யாவை கொண்டு வரும் அதே­வேளை ஈரா­னுக்கும் எதி­ராக இந்­தி­யாவை முன்­நி­றுத்தும் தந்­தி­ர­மாக அண்­மையில் இடம் பெற்ற இந்­திய ஜி 20 பிர­க­ட­னத்தில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட இந்­திய-– மத்­தி­ய­கி­ழக்கு- ஐரோப்பா ‘வர்த்தக ஒழுங்கை’ திட்­டத்­திற்கு ஈரான் எதி­ரா­னது என்­ப­தாக சித்­த­ரிக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், இந்த இஸ்­ரே­லிய திட்டம் பலிக்­குமா என்­பது கேள்விக் குறி­யாகும் . இவ்­வாறு ஈரானை தனி­மைப்­ப­டுத்தக் கூடிய வகை­யி­லான மேலைத்­தேய நகர்­வுகள் பல­வற்றை உதா­ர­ண­மாக கூறலாம்

இந்த நிலை­யி­லேயே தற்­பொ­ழுது செங்­க­டலில் வர்த்­தக கப்­பல்கள் மீதான ஹெளத்தி படை­களின் தாக்­குதல் ஆரம்­ப­மாகி உள்­ளது .

செங்­க­டலில் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த யேமன் நாட்டின் கிளர்ச்சி படை­க­ளான ஹெளத்தி படைகள், ஈரா­னிய ஆத­ரவு நிலைப்­பாடு கொண்ட தாக்­குதல் பிரி­வு­க­ளாகும்.

அண்­மையில் சவூதி அரே­பி­யா­வுடன் இடம்­பெற்ற எல்­லைப்­புற மோதல்­களில் ஈரா­னிய ஆளில்லா விமா­னங்­களின் உத­வி­யுடன் சவூ­திப்­ப­டை­களை நிலை குலைய வைத்­தி­ருந்­த­துடன் பாரிய எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­க­ளையும் நடத்தி இருந்­தன.

இதனால் சவூதி இரா­ணுவம் தனது படை­களை விலக்கி கொள்ளும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டது. அதன் பின்பு யுத்தம் அற்ற நிலையில் யேமன் சுதா­க­ரித்து வரும் நிலையில் தற்­பொ­ழுது செங்­க­டலில் வர்த்­தக கடற்­க­லன்கள் மீது தாக்­கு­தல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்தத் தாக்குதல்கள் ஹெளத்தி படை­களால் தான் மேற்கொள்ளப்பட்டனவா அல்­லது உள்­நாட்டில் ஹெளத்தி படை­க­ளுக்கு எதி­ராக போரா­டிய உதிரி படை­ய­ணி­களால் மேற்­கொள்­ளப்­பட்­ட­னவா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும் ஆனால், தாக்­கு­தல்கள் அமெ­ரிக்க தலை­மை­யி­லான நாடு­களை ஒன்று சேர்க்கும் தன்­மை­யி­லா­னது.

ஏனெனில், ஏற்­கெ­னவே ஈரா­னிய முக­வர்கள் என பல­ராலும் கரு­தப்­படும் ஹெளத்தி படைகள் இதில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­னது ஈரா­னுக்­கெ­தி­ராக சர்­வ­தே­சத்தில் பல நாடு­களை ஒன்று திரட்டும் தன்மை கொண்­ட­தா­கவே பார்க்கக் கூடி­ய­தாக உள்­ளது. ஆனால், ஈரான் இதில் வசப்­ப­டுமா என்­பது தான் முக்­கி­ய­மான விவ­கா­ர­மாகும்.

ஈரானை சர்­வ­தேச அரங்கில் முழுக்­குற்­ற­வா­ளி­யாக மாற்றும் அனைத்து தந்­தி­ரங்­களும் தற்­பொ­ழுது முடுக்கி விடப்­பட்­டி­ருப்­ப­தையே காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

ஆனால் புவி­யியல் ரீதி­யாக வளை­கு­டாவை தனது கேந்­தி­ர­மாக கொண்ட ஈரான், நாற்புறமும் மலைதொடர்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாகும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உள்நாட்டு யுத்தங்கள் தவிர வேறு எதனாலும் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாகாத தரைப்பிரதேசமாக அது உள்ளது.

இரண்டாம் உலக போர்காலத்தில் பிரிட்டன் மற்றும் சோவியத் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்திருந்தாலும் அவை நேசப்படைகளாக செயற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் மேற்கொள்ளும் திட்டங்கள் மிகவும் பாரதுாரமான பின்விளைவுகளை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை .

ஆனால், மத்திய கிழக்கில் உறுதியான அரசியல், இராணுவ மற்றும் உள்ளக நிர்வாக கட்டமைப்பை கொண்ட ஒரே அரசு தற்போது ஈரான் மட்டுமே. ஆனால், ஈரானின் இந்த உறுதியான நிலை இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு பாதகமானது என்பது இஸ்ரேலின் நீண்ட கால கொள்கையாக உள்ளது.

-லோகன் பரமசாமி-

Share.
Leave A Reply