நெலுவ, லங்காகம வீதியில் கொலந்தொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்ஸ் நாட்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெலுவையிலிருந்து லங்காகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று எதிரே வந்த காருக்கு வழிவிட்டு வீதியில் நிறுத்தப்பட்டதால், கார் அதிவேகமாக வந்து வேன் மீது மோதியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பெந்தோட்ட கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை பலி

இலங்கைக்கு நத்தார் பண்டிகையை கொண்டாட வந்த கஸகஸ்தான் பிரஜை ஒருவர் பெந்தோட்ட கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் டிட்டோ வொல்லோவ் என்ற 51 வயது கஸகஸ்தான் பிரஜையாவார்.

இவர் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்த நிலையில் இருவரும் காலி பெந்தோட்டவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர் தனது மனைவியுடன் பெந்தோட்ட கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share.
Leave A Reply