Bigg Boss Tamil 7: இந்த சீசனில் விசித்ரா டைட்டில் வின் பண்ணுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் தான் ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதை நிரூபித்து விட்டார் விசித்ரா என்றே தெரிகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று இரவு பணப்பெட்டியுடன் விசித்ரா வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரதீப் ஆண்டனி மற்றும் சுரேஷ் தாத்தா இதுபற்றி தங்கள் கருத்தை பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பமான நிகழ்ச்சி விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த வாரம் பணப்பெட்டியுடன் யார் வெளியேறப் போவது என்கிற கேள்வி தான் அனைவரது மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

விஜய் வர்மா, தினேஷ், மணி, பூர்ணிமா உள்ளிட்டோர் பணப்பெட்டியை தூக்குவார்கள் என ரசிகர்கள் ஆளுக்கொரு பெயரை அடுக்கி வந்தனர்.

 13 லட்சம் பணப்பெட்டி: 9 லட்சம் வரை பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டியின் விலை உயர்த்தப்பட்டது தற்போது வெளியான ப்ரோமோவில் காட்டப்பட்டது. ஆனால், நேற்று இரவு 13 லட்சம் பணப்பெட்டி வந்ததாகவும் அதை பார்த்த பலருக்கும் இன்னும் 15 லட்சமாக விலை உயரட்டும் என காத்திருந்து வந்த நிலையில், விசித்ரா அந்த சூப்பரான சம்பவத்தை செய்து விட்டார் என்கின்றனர்.

விசித்ரா மாஸ்டர் மைண்ட்: இந்த சீசனில் டைட்டிலே விசித்ராவுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், தன்னை விட அர்ச்சனா, தினேஷுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்பதை விசித்ரா அறிந்து வைத்துள்ளார்.

மேலும், கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவியின் சப்போர்ட் மாயாவுக்கு உள்ள நிலையில், 100 சதவீதம் தனக்கு டைட்டில் கிடைக்காது என உணர்ந்த விசித்ரா வந்த வரை லாபம் என பெரிய தொகையை தூக்கிக் கொண்டு வெளியேறி விட்டார் என்கின்றனர்.

நேற்று இரவு 10.45 மணிக்கு விசித்ரா வெளியேறி இருப்பதாகவும் முன்கூட்டியே தகவல்கள் கசிந்துள்ளன. இன்று இரவு தான் அந்த காட்சிகள் deffered liveல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் தாத்தா ஹேப்பி: விசித்ரா பணப்பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையை அவர் வீணடித்து விட்டார் என்றே தெரிகிறது.

வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு டைட்டில் கிடைப்பதை விட ஆரம்பத்தில் இருந்து விளையாடி வரும் விசித்ராவுக்கு டைட்டில் கிடைப்பது தான் சரியானது என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து விசித்ராவுக்கு கிடைத்து வரும் ஹேட்ரட் காரணமாக அவர் இப்படியொரு முடிவை எடுத்திருந்தால் நல்ல விஷயம் என சுரேஷ் தாத்தா பேசியுள்ளார்.

பிரதீப் ஆண்டனிக்கு விருப்பமில்லை: ஆனால், விசித்ரா 13 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய செய்தியை அறிந்த பிரதீப் ஆண்டனிக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் கடைசி வரை விசித்ரா போராடியிருக்க வேண்டும் என்றும் இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள ஷோவில் தான் ரியல் சம்பவம் காத்திருக்கு என பிரதீப் ஆண்டனி தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

 

Share.
Leave A Reply