ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையினை முன்னிட்டு இன அடக்குமுறை எதிராக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்காவுக்கு அருகாமையில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தென்க்கோனை கைது செய், மக்களின் வாழ்கையினை அழிக்காதே, கைதுசெய்தவர்களை விடுதலை செய், ஜனநாயக போராட்டத்தினை தடுத்து நிறுத்தாதே என்று கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்கள் வீதி மறியல் செய்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply