யாழ்ப்பாணத்தில் அண்மையில் தேன் விற்பனை செய்வது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதான இருவரும் கோண்டாவில், தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்த 50 மற்றும் 41 வயதுடையவர்கள் ஆவர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply