காலி – புஸ்ஸ பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு முன்பதாக சைக்கிளை செலுத்திச் சென்ற நபரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கோடரியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (4) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர் காலி – புஸ்ஸ , பிட்டிவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடையவராவார்.

இவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவரது மகன் நேற்று வியாழக்கிழமை (4) காலை சில குழுவினரால் வாளால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இவர் சந்தேக நபரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து இவர் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply