“லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் இஸ்ரேல், டிரோன் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் ஷேக்சலே-அல்-அரூரியை கொன்றது.

இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

அதன் படி இஸ்ரேலின் மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இது குறித்து ஹிஸ்புல்லா இயக்கம் கூறும்போது, ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டது. 62 வகை ஏவுகணைகளை வீசி மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் தாக்கப்பட்டது என்று தெரிவித்தது.

இந்த தாக்குதலால் ஓடு பாதை சேதம் அடைந்தது என்றும் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து இஸ்ரேலிய விமானப்படையால் போர் விமானங்கள் இயக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

Share.
Leave A Reply