புர­தான இஸ்­ரேலின் வம்­சா­வ­ளி­யி­ன­ராக விவி­லியம் கருதும் இஸ்­ர­வே­லர்கள். இந்த இஸ்­ர­வே­லர்கள் எகிப்­தி­யர்­க­ளிடம் பல தலை­மு­றை­க­ளாக அடி­மை­க­ளாக இருக்­கி­றார்கள்.

அவர்­களை மோசே தலை­மையில் மீட்­டெ­டுக்­கிறார், ஆண்­டவர். எகிப்தை விட்டு வெளி­யேறச் செய்­வது திட்டம். இரவு நேரத்தில் செங்­க­ட­லுக்கும் பாலை­வ­னத்­திற்கும் இடையில் இஸ்­ர­வே­லர்கள் தங்க வைக்­கப்­ப­டு­கி­றார்கள்.

எகிப்தின் பாரோ மன்­ன­னுக்கு கோபம் வரு­கி­றது. நமக்கு சேவகம் செய்­த­வர்கள் தப்பிச் செல்­கி­றார்­களே என்று ஆத்­தி­ரப்­ப­டு­கிறான்.

இஸ்­ர­வே­லர்கள் தப்பிச் செல்­வதைத் தடுப்­ப­தற்­காக, 600 பேர் கொண்ட படையைத் திரட்டி வரு­கிறான்.

படைகள் மக்­களை நெருங்­கு­கின்­றன. மக்கள் அழு­கி­றார்கள். படை­க­ளிடம் சிக்கி மடி­வதை விடவும், அடி­மை­க­ளாக வாழ்­வது மேல் என்று மோச­ஸிடம் முறை­யி­டு­கி­றார்கள். ஆண்­டவர் மோசே­யிற்கு கட்­ட­ளை­யி­டு­கிறார். மோசே கைத்­த­டியை கடலை நோக்கி உயர்த்­து­கிறார். கடல் இரண்­டாகப் பிரி­கி­றது. காற்று நிலத்தை உலரச் செய்­கி­றது.

இஸ்­ர­வே­லர்கள் உலர்ந்த தரைமேல் நடந்து தப்­பிக்­கி­றார்கள். இரு­பு­றங்­க­ளிலும் கடல்நீர் மதிற்­கோட்டை போல உயர்ந்து உறைந்து நிற்­கி­றது.

மக்கள் கடலை கடக்­கி­றார்கள். பாரோவின் படைகள் பின்­தொ­டர்­கின்­றன. கடலை நோக்கி கையை உயர்த்­து­மாறு மோசே­யிற்கு கடவுள் கட்­ட­ளை­யி­டு­கிறார்.

கடல் இயல்பு நிலைக்குத் திரும்­பு­கி­றது. தண்ணீர் புரண்டு பாரோவின் படை­களை அடி­யா­ழத்தில் மூழ்­க­டித்து விடு­கி­றது.

அனை­வரும் ஆண்­ட­வரின் சக்­தியை உணர்­கி­றார்கள். மோசேயின் சகோ­தரி கட­வுளைப் பாடு­கிறாள்.

இது செங்­கடல் பிரிந்த கதையை விவி­லி­யத்தின் பழைய ஏற்­பாடு விப­ரிக்கும் கதையின் சாராம்சம்.

கட­வுளின் கட்­ட­ளைக்கு அமைய பிரிந்து நின்று இஸ்­ர­வே­லர்கள் தப்­பிக்க உதவி செய்த செங்­கடல், மீண்டும் பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருக்­கி­றது.

யேமன் மண்ணில் இருந்து ஆயு­த­மேந்திப் போராடும் ஹெளத்தி இயக்கம். அதற்கு சக்தி இருந்தால் செங்­க­டலைப் பிரித்து இஸ்­ரே­லிய கப்­பல்­களை மூழ்­க­டித்­தி­ருக்கும்.

ஆண்­டாண்டு காலம் திறந்­த­வெளிச் சிறைச்­சா­லையில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் காஸா மக்கள் மீதான கரி­ச­னையை சுய­பி­ர­க­டனம் செய்த இயக்கம்.

இந்த இயக்கம் சம­கால இஸ்­ரே­லிய இராஜ்­ஜி­யத்தின் பிர­ஜை­க­ளுக்கு எந்­த­வ­கை­யி­லேனும் உத­வி­யாக அமையக் கூடிய கப்பல் போக்­கு­வ­ரத்தை சீர்­கு­லைத்து வரு­கி­றது.

பலஸ்­தீ­னர்கள் மீதான அக்­கி­ர­மத்தை நிறுத்தும் வரையில், செங்­க­டலில் பய­ணிக்கும் கப்­பல்கள் மீதான தாக்­குதல் ஓய மாட்­டா­தென ஹெளத்தி இயக்கம் சூளு­ரைத்­துள்­ளது. அன்று இஸ்­ர­வே­லர்­க­ளுக்­காக பிரிந்து நின்று வழி­விட்ட செங்­கடல், இன்­றைய இஸ்­ரே­லிய துறை­மு­கங்­க­ளுக்கு பொருட்­களை எடுத்துச் செல்லும் கப்­பல்­களின் பிர­தான பயண வழி.

அது மாத்­தி­ர­மன்றி, உல­க­ளா­விய ரீதியில் எரி­பொ­ரு­ளையும் தானி­யங்­க­ளையும் கொண்டு செல்லும் வணிகக் கப்­பல்­க­ளுக்கும் பிர­தான பயண மார்க்கம்.

பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக நாங்கள் இருக்­கிறோம் என்­பதை உல­கிற்கு உரத்துக் கூற, ஹெளத்தி இயக்­கம் செங்­க­டலில் வணிகக் கப்­பல்­க­ளையும் தாக்­கி­யது.

இதன் கார­ண­மாக, செங்­க­டலில் பய­ணித்து சுயஸ் கால்வாய் ஊடாக செல்ல வேண்­டிய கப்­பல்கள், ஆபி­ரிக்க கண்­டத்தை சுற்றிப் பய­ணிக்க நேர்ந்­தது.

இது செங்­கடல் பிரிந்து பாதிக்­கப்­பட்ட மக்கள் கூட்டம் தப்­பிக்க வழி கொடுக்கும் காலம் இல்­லையே. சுற்றிச் சென்றால், கப்­பல்கள் அதிக கட்­டணம் வசூ­லிக்கும் காலம்.

அது தவிர, ஆபத்து உண்­டென்றால், கப்­பல்­களை காப்­பீடு செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம். கம்­ப­னிகள் அதிக கட்­ட­ணத்தை செலுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் ஹெளத்தி இயக்கம் வணிகக் கப்­பல்கள் மீது நடத்­திய தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, செங்­க­டலில் போக்­கு­வ­ரத்து மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக, சரக்குக் கப்பல் போக்­கு­வ­ரத்து குறைந்து உல­க­ளா­விய ரீதியில் பொருட்­களின் விலை அதி­க­ரிக்கும் நிலை தோன்­றி­யி­ருக்­கி­றது.

சம­கா­லத்தில், இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்­பதும், எங்கும் பிர­சன்­ன­மாக இருப்­பதும் வேறு யாரு­மல்ல. அமெ­ரிக்கா தான்.

ஹெளத்தி இயக்­கத்­திடம் இருந்து செங்­க­ட­லையும், கப்­பல்­க­ளையும், இஸ்­ரே­லி­யர்­க­ளையும் பாது­காக்க அமெ­ரிக்கா ‘சுபீட்­சத்தின் காவல் தெய்­வங்­களை’ அழைத்­தது.

ஆம், செங்­க­டலில் கப்­பல்­களைப் பாது­காக்க பல நாடு­களை அழைத்து அமெ­ரிக்கா அமைத்த கூட்­ட­ணியின் பெயர் அது தான். ஆங்­கி­லத்தில் Operation Prosperity Guardians.

செங்­க­டலில் கப்­பல்­களைக் காக்க அமெ­ரிக்கா என்ற ஆபத்­பாந்­தவன், காவல் தெய்­வங்­க­ளாக கருணை காட்­டு­மாறு 39 நாடு­க­ளுக்கு அழைப்பு விடுத்­தாலும், அதில் இணைந்­த­தென்­னவோ பத்து நாடுகள் தான்.

அவற்றில் பிரிட்டன், பஹ்ரேன், கனடா, பிரான்ஸ், இத்­தாலி, நெதர்­லாந்து, நோர்வே, சீஷெல்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடு­களும் உண்டு.

ஹெளத்தி இயக்­கத்தை வில்­லத்­தனம் புரியும் அரக்கன் என்றால், அதற்கு எதி­ரான செங்­கடல் யுத்­தத்துக்கு அனை­வ­ரையும் அழைக்க வேண்டும் அல்­லவா?

யாரை அழைத்­தாலும் சீனாவை அமெ­ரிக்கா அழைக்­காது. சீனாவின் செல்­வாக்கு அதிகம். செங்­க­டலில் சீனக் கப்­பல்­களின் பிர­சன்­னமும் அதிகம்.

இருந்­த­போ­திலும், இந்த உலகில் இரு ஆபத்­பாந்­த­வர்கள் இருக்க முடி­யாது அல்­லவா? தான் மட்­டுமே ஆபத்­பாந்­த­வ­னாகத் திகழ விரும்பும் அமெ­ரிக்­காவின் சுய­நல அர­சியல். செங்­க­டலில் வணிகக் கப்­பல்­களை பாது­காக்கும் அமெ­ரிக்­காவின் கூட்­டணி என்ன செய்யும்? அமெ­ரிக்கா கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கை­யாக அமையும்.

உலகின் வெவ்­வேறு கடற்­பா­கங்­களில் இத்­த­கைய கூட்­ட­ணி­களை அமைத்து, கப்பல் போக்­கு­வ­ரத்தை பாது­காக்கும் ஏற்­பா­டுகள் இருக்­கின்­றன.

சோமா­லி­யா­விற்கு அப்­பாற்­பட்ட கடற்­ப­ரப்பில் கடற்­கொள்­ளை­யர்­க­ளிடம் இருந்து பாது­காக்க ஐரோப்­பிய நாடுகள் ஸ்தாபித்த கடற்­படைக் கூட்­டணி சிறந்த உதா­ரணம்.

செங்­க­டலின் கப்பல் போக்­கு­வ­ரத்தைப் பாது­காக்க கூட்­டணி அமைப்­பது ஆக்­க­பூர்­வ­மான செய­லாக அமெ­ரிக்கா வர்­ணிக்­கலாம்.

ஆனால், சீனா போன்ற ஜாம்­ப­வான்­களை விலக்கி வைத்து விட்டு சர்­வ­தேச பாது­காப்பு பற்றி பேசு­வது எந்­த­ளவு நியாயம் என்­பது தெரி­ய­வில்லை.

இப்­போது செங்­க­டலில் பய­ணிக்கும் கப்­பல்­களை ஹெளத்தி கிளர்ச்­சி­யா­ளர்கள் தாக்­குதல் என்­பது, சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்கள் போன்­ற­தொரு பிரச்­சினை அல்ல.

இது காஸாவில் நிகழும் மனிதப் பேர­வ­லத்தை நிறுத்தக் கோரும் எத்­த­னிப்பின் அடிப்­ப­டை­யி­லான பிரச்­சினை.

வர­லாற்றுக் காலத்தில் எகிப்­தி­யர்­களால் அடி­மைப்­ப­டுத்­தப்­பட்ட இஸ்­ர­வே­லர்­களைக் காப்­பாற்ற ஆண்­ட­வனின் துணை­யுடன் மோசஸ் முன்­வந்­ததை வர­வேற்­கலாம்.

காஸாவில் வாழும் பலஸ்­தீ­னர்­களைக் காப்­பாற்ற இது­வரை எந்­த­வொரு மோசஸும் வர­வில்லை. அந்த மக்கள் தப்­பிப்­ப­தற்­காக செங்­க­டலும் பிள­வு­ப­டு­வது கிடை­யாது.

இருந்­த­போ­திலும், பலஸ்­தீன மக்கள் மீதான அட்­டூ­ழி­யங்கள் நிறுத்­தப்­பட வேண்டும் என்று உலக மக்கள் கூட்­டாக கோரிக்கை விடுக்­கி­றார்கள். அந்தக் கோரிக்­கைக்கு வன்­முறை வடி­வ­மொன்று இருக்­கு­மாயின், அதுவே ஹெளத்தி இயக்­கத்தின் தாக்­கு­தல்கள் என்று கூற முடியும்.

எனவே, பிரச்­சினை காஸாவில் வாழும் பலஸ்­தீ­னர்கள் என்றால், அதற்­கு­ரிய தீர்வு காஸாவை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே இருக்க வேண்டும். கடற்­படை பாது­காப்புக் கூட்­ட­ணியை அதுவும் சிக்­க­லா­ன­தொரு கூட்­ட­ணியை அமைப்­பது இரா­ணுவ பலத்தைக் காட்டும் பொருத்­த­மற்ற நட­வ­டிக்கை.

இரா­ணுவ பலத்தில் மிகை­யாக தங்­கி­யி­ருப்­பதை விடவும் அர­சியல் பேச்­சு­வார்த்­தை­களை, கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வதே பொருத்­த­மா­னது.

இன்று செங்­கடல் போக்­கு­வ­ரத்துப் பிரச்­ச­னையால் பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது. பொரு­ளா­தார ஸ்திர­மற்ற நிலை தீவிரம் பெறு­கி­றது.

இத்­த­கைய பின்­பு­லத்தில் பயன்­த­ரக்­கூ­டிய இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கைகள் அவ­சியம். அவை பிரச்­சி­னையின் மூல­மான காஸாவின் அவல நிலையை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்க வேண்டும்.

காஸா­விற்கு மனி­தா­பி­மான உத­விகள் செல்­வதை அனு­ம­தித்து, இஸ்­ரேலின் முற்­று­கையை நிறுத்த வேண்டும் என்­பது ஈரானின் உத­வி­யுடன் இயங்­கு­வ­தாகக் கூறப்­படும் ஹெளத்தி இயக்­கத்தின் கோரிக்கை.

இந்தக் கோரிக்கை ஒட்­டு­மொத்த உலகம் கொண்­டுள்ள பொது­வான அபி­லா­ஷையின் பிர­தி­ப­லிப்­பாக இருந்­த­போ­திலும், இதற்குள் மிகவும் சிக்­க­லான புவிசார் அர­சி­யலின் நீரோட்­டங்­களை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இந்த நீரோட்­டங்கள் பெருக்­கெ­டுத்து பெரு­வெள்­ள­மாக மாறு­வதைத் தடுக்க வேண்டும்.

அதற்குப் பொருத்­த­மான வழி, பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டிய புதிய வழி­முறை­களைத் தேடிக் கண்­டு­பி­டிப்­பது தான்.

மலரும் புது­வ­ரு­டத்தில் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மை­யையும் உலகம் பாது­காப்­பாக இருக்க வேண்­டு­மெனில், காஸா மக்­களின் பேர­வ­லத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்து அமைதி வழியில் பிரச்சினையை தீர்ப்பது மாத்திரமே சிறப்பான அணுகுமுறையாக இருக்கும்.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

Share.
Leave A Reply