காஸாவில் இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்­களை முடக்­கி­வைப்­ப­தற்­கான நாடு­களை, குறிப்­பாக எகிப்து மற்றும் ஜோர்தான் போன்­ற­வற்றை, தேடிக்­கொண்­டி­ருப்­ப­தாக காஸாவில் பலஸ்­தீன இனப்­ப­டு­கொ­லையில் ஈடு­பட்­டி­ருக்கும் இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு தனது ஆத­ர­வாளர் மத்­தியில் குறிப்­பிட்­ட­தாக லண்­டனை தள­மாகக் கொண்ட இணை­யத்­த­ள­மான ‘மிடில் ஈஸ்ட் ஐ’ தெரி­வித்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும், ஐக்­கிய அமெ­ரிக்க – இஸ்­ரே­லிய கையாட்­க­ளான எகிப்தும் ஜோர்­தானும் பலஸ்­தீ­னர்­களை தங்கள் எல்­லைக்குள் அனு­ம­திப்­பதை நிரா­க­ரித்­துள்­ளன. இந்­நிலை 1948 இன் நக்­பாவை நினை­வு­ப­ டுத்­து­கி­றது. அன்று சியோ­னிச ஆயு­த­தா­ரிகள் 700,000 இற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்­களை அவர்­களின் வர­லாற்று தாய­கத்­தி­லி­ருந்து இன ரீதி­யாக சுத்­தி­க­ரித்து இஸ்ரேல் என்ற போர் வெறி கொண்ட அரசை உரு­வாக்­கினர்.

ஊழல்­மிகு அர­சியல் தலை­வர்­க­ளுக்கு இலஞ்சம் வழங்கி, பலஸ்­தீ­னர்­களை அங்கே குடி­ய­மர்த்­தக்­கூ­டிய ஆபி­ரிக்க நாடு­க­ளையும் இஸ்ரேல் தேடிக்­கொண்­டி­ருக்­கின்­றது. இருப்­பினும் 2024 என்­பது 1948 அல்ல, பலஸ்­தீ­னர்கள் வேறு எங்கும் குடி­யே­று­வதை விட காஸாவில் இறப்­பதே சிறந்­த­தென சபதம் செய்­துள்­ளனர்.

இது தொடர்பில் புலிட்சர் பரிசு வென்ற அமெ­ரிக்க பத்­தி­ரி­கை­யாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் கூறி­ய­தா­வது:

‘காஸா­வுக்­கான இஸ்­ரேலின் மூலோ­பாயத் திட்­ட­மா­னது ஜேர்­ம­னியின் நாஸி அர­சாங்கம் மேற்­கொண்ட யூத இன அழிப்­பினை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்­டுள்­ளது என்­பது தெளிவு.

உட்­கட்­ட­மைப்பு, மருத்­துவ சுகா­தார வச­திகள், சுத்­த­மான குடி­நீரைப் பெறுதல் உட்­பட அனைத்­தையும் அழித்தல், உணவு மற்றும் எரி­பொ­ருளின் ஏற்­று­ம­தியைத் தடுத்தல், தொழிற்­துறை வன்­மு­றையை கண்­மூ­டித்­த­ன­மாக கட்­ட­விழ்த்து, ஒரு நாளில் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­களைக் கொல்­லு­தலும், காயப்­ப­டுத்­து­தலும், பட்­டி­னியை ஏற்­ப­டுத்­து­தலும் இத்­திட்­டத்­தினுள் அடங்கும். ஐ.நா. வின் மதிப்­பீட்டின் படி, அரை மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் ஏற்­கெ­னவே பட்­டி­னியால் வாடு­கின்­றனர்.

மேலும் உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்தும் நோய்த்­தொற்­றுகள், தின­சரி இடம்­பெறும் படு­கொ­லைகள், தங்கள் வாழி­டங்­களை விட்டு பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­படல் என்­பன காஸாவை ஒரு பாரிய சவக்­கி­டங்­காக மாற்­றி­யுள்­ளன.

பலஸ்­தீ­னர்கள் ஒன்றில் வெடி­குண்­டு­களால் ஏற்­படும் மரணம், நோய்த் தாக்கம், பட்­டி­னிச்­சாவு என்­ப­வற்­றாலோ அல்­லது தமது தாயக பூமி­யி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­கப்­படல் என்­ப­வற்றுள் ஒன்றை தெரிவு செய்­வ­தற்கு நிர்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். மரண ஓலம் விரைவில் எங்கும் வியா­பித்­தி­ருக்கும் நிலை தோன்றும். அப்­போது வாழ விரும்­பு­வோ­ருக்­கான ஒரே தெரி­வாக நாடு கடத்­தப்­ப­டு­தலே அமையும்.

1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல் காஸாவைக் கைப்­பற்­றி­ய­துடன் அடக்­கு­முறை இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பை பயன்­ப­டுத்தி பலஸ்­தீ­னர்­களை குறை மனிதப் பிற­வி­க­ளாகக் கருதி நடத்த ஆரம்­பித்­தது.

சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் கூற்­றுப்­படி, 1967 ஆம் ஆண்டு ஜூன் முதல் நிலத்தை அப­க­ரிக்கும் இஸ்­ரேலின் ஈவி­ரக்­க­மற்ற கொள்­கைகள், சட்­ட­வி­ரோத குடி­யேற்றம், நில அப­க­ரிப்­புகள், கடு­மை­யான பாரா­பட்சம் என்­பன பலஸ்­தீ­னர்­களின் அடிப்­படை மனித உரி­மை­களைப் பறித்து பெரும் துன்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இஸ்­ரேலின் இரா­ணுவ ஆட்­சி­யா­னது ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீனப் பகு­தி­களில் அன்­றாட வாழ்வின் ஒவ்­வொரு அம்­சத்­தையும் சீர்­கு­லைக்­கின்­றது.

பலஸ்­தீ­னர்கள் எவ்­வாறு, எப்­போது, எப்­படி வேலைக்குச் செல்ல வேண்டும் அல்­லது பாட­சாலைக்குச் செல்ல வேண்டும், வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­வது, அவர்­க­ளது உற­வி­னர்­களைப் பார்ப்­பது, வாழ்­வா­தா­ரத்தைச் சம்­பா­திப்­பது, போராட்­டத்தில் கலந்து கொள்­வது, அவர்­க­ளது விவ­சாய நிலங்­களை பெறு­வது, அல்­லது மின்­சாரம் அல்­லது சுத்­த­மான நீர் வழங்­கு­வது என அனைத்து அன்­றாட செயற்­பா­டு­க­ளிலும் தனது அத்­து­மீ­றிய செல்­வாக்கைப் பிர­யோ­கிக்­கின்­றது.

இவை­ய­னைத்தும் தின­சரி அவ­மானம், பயம், அடக்­கு­மு­றை­யினை பிர­தி­ப­லிக்­கின்­றது. இவ்­வ­கையில் இஸ்­ரே­லா­னது பலஸ்­தீன மக்­களின் முழு வாழ்­வையும் பண­ய­மாக வைத்­துள்­ளது.

இஸ்ரேல், ஆயி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்­களை அவர்­க­ளது நிலங்­களில் இருந்து கட்­டா­யப்­ப­டுத்தி அகற்றி, அதனை ஆக்­கி­ர­மித்து சட்­ட­வி­ரோ­த­மாக பிரத்­தி­யேக யூத இஸ்­ரே­லிய குடி­யேற்­ற­வா­சி­களின் குடி­யேற்­றங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தால் மட்­டு­மன்றி எல்லை தாண்­டிய அத்­து­மீ­றிய குடி­யேற்­ற­வா­சி­க­ளாலும் தாக்­கப்­ப­டு­கின்­றனர். அத்­துடன் இஸ்ரேல் தனது கொள்­கை­க­ளுக்கு எதி­ரான எதிர்ப்­பு­களை தகர்த்­தெ­றிய கடு­மை­யான இரா­ணுவ சட்­டங்­களை கைக்­கொள்­கின்­றது.

அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்­களால் முழு பலஸ்­தீன சமூ­கங்­களும் இடம்­பெ­யர்ந்­துள்­ளன.

அவர்­க­ளது வீடுகள் மற்றும் வாழ்­வா­தா­ரங்கள் அழிக்­கப்­பட்­டு­விட்­டன, அவர்­களின் நட­மாட்டம், அவர்­க­ளது சொந்த நிலம், நீர் மற்றும் பிற இயற்கை வளங்­களை பெறுதல் என்­ப­வற்றில் கடு­மை­யான கட்­டுப்­பா­டுகள் அமு­லாக்­கப்­ப­டு­கின்­றன.

மாறாக இஸ்­ரே­லர்கள், யூத குடி­யேற்­ற­வா­சிகள், வெளி­நாட்­டவர் ஆகி­யோ­ருக்கு எத்­த­கைய கட்­டுப்­பா­டு­களும் இல்­லா­த­தோடு அவர்கள் காஸா­விற்கு உள்­ளேயும் வெளி­யேயும் பயணம் செய்­வ­தற்கு முழு சுதந்­தி­ரமும் பெற்­றுள்­ளனர்.

பல ஆண்­டு­க­ளாக, இஸ்­ரேலின் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அனு­ம­தி­யுடன் பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக மட்­டுமே திறந்­தி­ருக்கும் காஸா­வி­லி­ருந்து தரை­வ­ழி­யான எல்லை நுழைவுப் பாதை தவிர்ந்த ஏனைய அனைத்து பாதை­க­ளையும் படிப்­ப­டி­யாக இஸ்ரேல் மூடி­யுள்­ளது.

பலஸ்­தீன எதிர்ப்பை சமா­ளிக்க முடி­யாமல் இஸ்ரேல் ஒரு­த­லைப்­பட்­ச­மாக காஸாவில் இருந்து 2005 இல் வெளி­யே­றிய போதிலும் அதன் மீதான கட்­டுப்­பாட்டை தொடர்ந்தும் வைத்­தி­ருந்­தது.

2007 ஆகும்­போது காஸாவில் நகர்ப்­புறம் மற்றும் பரந்­து­பட்ட இதரப் பிர­தே­சங்­க­ளிலும் தனது போட்­டி­யா­ள­ரான ஃபத்தாஹ் அமைப்­போடு தேர்­தல்கள் மற்றும் மோதல்­க­ளிலும் வெற்றி பெற்ற ஹமாஸ் அமைப்­பினர் ஏக ஆளும் அதி­கா­ர­மிக்­க­வர்­க­ளாக உரு­வெ­டுத்­துள்­ளனர்.

இஸ்ரேல் மென்­மேலும் அதனை தனது கைப்­பி­டிக்­குள்­ளேயே வைத்து ஆக்­கி­ர­மிப்பைத் தொடர்­கின்­றது. அப்­பி­ர­தே­சத்­திற்கு உள்­ளேயும் வெளி­யேயும் கொண்டு செல்­லப்­படும் அனைத்­தையும் கட்­டுப்­ப­டுத்தி கடுந்­த­டை­களை விதிக்­கின்­றது.

இவ்­வாறு காஸா திறந்­த­வெளிச் சிறைச்­சா­லை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அங்கு ட்ரோன்கள், ஒட்டுக்கேட்டல், உள்­ளூ­ரி­லுள்ள உள­வா­ளிகள், அட்­டூ­ழி­யங்கள் என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி அதி தீவிர கண்­கா­ணிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் நடை­மு­றையில் தூரத்­தி­லி­ருந்து காஸாவைக் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பதை விட இது இஸ்­ரே­லுக்கு கடி­ன­மா­ன­தாக அமைந்­தது. சிறைச்­சா­லைக்குள் கிடைத்த சிறிய இடை­வெளி மற்றும் அவ­கா­சத்தைப் பயன்­ப­டுத்தி இஸ்­ரேலால் கண்­கா­ணிக்க முடி­யாத நிலக்கீழ் சுரங்­கப்­பாதை வலை­ய­மைப்­பினைப் பயன்­ப­டுத்தி அதி­நவீன வடி­வி­லான எதிர்ப்பு இயக்­கத்தை ஹமா­ஸினால் உரு­வாக்க முடிந்­தது.

இத்­த­கைய மூச்­சுத்­தி­ணறும் சூழ்­நி­லையில், முழு உல­கி­னாலும் ஏறத்­தாழ கைவி­டப்­பட்ட நிலை­யிலும், முடி­வில்­லாத இஸ்­ரே­லிய குற்­றங்­களை உதா­சீ­னப்­ப­டுத்தும் நிலை­யிலும் இருந்த போதுதான், ஹமாஸ் ஆனது 2023 அக்­டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது தாக்­குதல் நடத்தி உலகின் கவ­னத்தை ஈர்த்­தது. அத்­தோடு இஸ்­ரே­லுடன் மறை­மு­க­மாக பழக ஆரம்­பித்த அரபு நாடு­களின் சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் இந்­நி­கழ்ச்சி ஒரு தெளி­வான செய்­தியை வழங்­கி­யது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில், ஐக்­கிய அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து மற்றும் ஐரோப்­பாவின் முழு ஆத­ர­வுடன், வான், கடல், நிலம் மூலம் பயங்­கர அதிர்­வ­லை­களை உரு­வாக்கி கண்­மூ­டித்­த­ன­மாக குண்­டு­வீசி 85 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான கட்­டி­டங்­களை அழித்­த­துடன் அப்­பாவி பலஸ்­தீன மக்­களைக் கொன்று குவித்து, அவர்­களை நடுங்கும் குளிரில் திறந்த வெளியில் தெருக்­களில் வாழத் தள்­ளி­யது.

இஸ்ரேல் மற்றும் அதன் ஐக்கிய அமெரிக்க – ஐரோப்பிய பங்குதாரர்களின் கொடூரமான மற்றும் தீய தன்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்த மக்கள் ஒக்டோபர் 8 முதல் நீர், உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மின்சாரம் இல்லாமல் பட்டினியால் இறந்துவருகின்றனர்.

காஸாவில் இதுவரை இஸ்ரேலின் இடைவிடாத வான்வழி குண்டுவீச்சு மற்றும் தரைவழி ஆக்கிரமிப்பு குறைந்தது 21,507 பேரை காவு கொண்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவின் 439,000 வீடுகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் மற்றும் அதன் கட்டிடங்களில் அரைவாசி சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்பில் தேவாலயங்கள், பழங்கால மஸ்ஐpத்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சொகுசு ஹோட்டல்கள், திரையரங்குகள், பாடசாலைகள் என்பன சேதமடைந்துள்ளன.

பலஸ்தீனர்களுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி மத்திய கிழக்கை பற்றியெரியவைக்கும் என்று பத்தி எழுத்தாளர் தாஹா ஓசன் எச்சரித்தார்.

லத்தீப் பாரூக் Virakesari

தமிழில்: பிஷ்ருன் நதா மன்சூர்

Share.
Leave A Reply