வட துரு­வத்தை அண்­டிய நாடான பின்­லாந்தில் ஜன­வரி 28இல் நடை­பெற்ற அரசுத் தலைவர் தேர்­தலில் எந்­த­வொரு வேட்­பா­ளரும் 50 வீதத்திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றி­ராத நிலையில் இரண்­டா­வது சுற்றுத் தேர்­த­லுக்­கான அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முதல் சுற்றில் முன்­னிலை வகித்த இரு­வ­ருக்கும் இடை­யி­லான தேர்தல் பெப்­ர­வரி 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

உலக அர­சியல் அரங்கில் பெரிதும் அறி­யப்­பட்­டி­ராத பின்­லாந்து, கடந்த வரு­டத்தில் உலகின் கவ­னத்தைப் பெரிதும் ஈர்த்­தி­ருந்­தது.

2022 பெப்­ர­வ­ரியில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்­கொண்ட படை­யெ­டுப்பைக் காரணம் காட்டி, அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நேட்டோ அமைப்பில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பின்­லாந்து இணைந்து கொண்­டது.

ரஷ்­யா­வுடன் 1,340 கிலோ­மீற்றர் நீள­மான எல்­லையைக் கொண்ட நாடான பின்­லாந்து, நேட்­டோ­வுடன் இணைந்து கொண்­டதை அடுத்து அந்த நாடு கேந்­திர முக்­கி­யத்­து­வத்தைப் பெற்றுக் கொண்­டது.

அதன் பின்­னான காலப்­ப­கு­தியில் நடை­பெறும் தேர்தல் என்­பதால் இந்தத் தேர்­தலும் உலகின் கவ­னத்தை ஈர்ப்­ப­தாக உள்­ளது.

அத்­தோடு அரசுத் தலை­வ­ராகப் பொறுப்­பேற்­ப­வரே ஆயுதப் படை­களின் தள­ப­தி­யா­கவும் விளங்­குவார் என்­பதால் பத­வியில் அமரப் போவது யார் என்ற எதிர்­பார்ப்பும் அதி­க­ரித்து உள்­ளது.

5.6 மில்­லியன் மக்கள் தொகையைக் கொண்ட பின்­லாந்தில் பதிவு செய்­யப்­பட்ட 4.5 மில்­லியன் வாக்­கா­ளர்கள் உள்­ளனர்.

முத­லா­வது சுற்று வாக்­க­ளிப்பில் 71.53 வீத வாக்­கா­ளர்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். 9 வேட்­பா­ளர்கள் கலந்து கொண்­டி­ருந்த இந்தத் தேர்­தலில் தேசியக் கூட்­டணிக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் பிர­தமர் அலெக்­ஸான்டர் ஸ்ரப் 27.21 வீத வாக்­கு­களைப் பெற்று முத­லி­டத்தைப் பிடித்தார்.

தற்­போ­தைய அமைச்­ச­ர­வையில் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராகப் பதவி வகித்த, மிகவும் அறி­யப்­பட்ட ஐ.நா. சபை இரா­ஜ­தந்­தி­ரி­யு­மான பெக்கா ஹவிஸ்ரோ 25.80 வீத வாக்­கு­களைப் பெற்று இரண்­டா­வது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்­நி­லையில் இவர்கள் இரு­வ­ருக்கும் இடையில் இரண்­டா­வது சுற்றுத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது.

தேர்­தலில் வெற்றி பெறு­பவர் மார்ச் முதலாம் திகதி பின்­லாந்தின் 13ஆவது அரசுத் தலை­வ­ராகப் பத­வி­யேற்பார்.

பின்­லாந்தில் அரசுத் தலை­வரின் பதவிக் காலம் ஆறு வரு­டங்கள் ஆகும். அது மாத்­தி­ர­மன்றி இந்தப் பதவி அமெ­ரிக்க, ரஷ்ய, சீன அரசுத் தலை­வர்­களின் பத­விக்கு ஒப்­பான நிறை­வேற்று அதி­காரம் கொண்­டது என்­ப­துவும் குறிப்­பி­டத்­தக்­கது.

55 வயது நிரம்­பிய ஸ்ரப், கடந்த 20 வரு­டங்­க­ளாக அர­சி­யலில் ஈடு­பட்டு வரு­கின்றார். அந்த வரு­டத்தில் ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்­யப்­பட்ட அவர் தொடர்ந்­து­வந்த காலங்­களில் பின்­லாந்தில் பல தட­வைகள் அமைச்­ச­ரா­கவும், 2014-–15 காலப்­ப­கு­தியில் தலைமை அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­தி­ருந்தார்.

2017ஆம் ஆண்டில் ஐரோப்­பிய முத­லீட்டு வங்­கியின் உப தலை­வ­ராக நிய­மனம் பெற்றார். தற்­போது ஐரோப்­பியப் பல்­கலைக்கழகக் கல்­லூ­ரியில் பேரா­சி­ரி­ய­ரா­கவும், துறைத் தலை­வ­ரா­கவும் பணி­யாற்றி வரு­கின்றார்.

65 வயது நிரம்­பிய மிகவும் அறி­யப்­பட்ட இரா­ஜ­தந்­தி­ரி­யான ஹவிஸ்ரோ, அரசுத் தலைவர் தேர்­தலில் மூன்­றா­வது முறை­யாகப் போட்­டி­யி­டு­கின்றார்.

2012 மற்றும் 2018ஆம் ஆண்­டு­களில் நடப்பு அரசுத் தலைவர் சவுலி நினிஸ்­ரோவை எதிர்த்துப் போட்­டி­யிட்டு இரண்டு தட­வை­க­ளிலும் இரண்­டா­வது இடத்தைப் பிடித்­தி­ருந்தார்.

தற்­போ­தைய தேர்­தலில் சுயேட்­சை­யாகக் கள­மி­றங்­கிய இவர் பசுமை அணியின் சார்பில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.

பல தடவை அமைச்­ச­ராகப் பணி­யாற்­றி­யி­ருந்த இவர் கடந்த வருடம் வெளி­யு­றவு அமைச்­ச­ராகப் பணி­யாற்­றிய போது பின்­லாந்தை நேட்­டோவில் இணைக்கும் ஆவ­ணத்தில் இவரே கையொப்பம் இட்­டி­ருந்தார்.

ஓரினச் சேர்க்­கை­யா­ள­ராகத் தன்னை வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்துக் கொண்­டுள்ள இவர், இரண்­டா­வது சுற்றுத் தேர்­தலில் வெற்­றி­பெற்று நாட்டின் அதி­ப­ரானால் அதுவும் ஒரு சாத­னை­யாக வர­லாற்றில் இடம்­பி­டிக்கும் வாய்ப்பு உள்­ளது.

இரண்­டா­வது சுற்றில் ஸ்ரப் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதிகம் உள்­ள­தாக எதிர்வு கூறல்கள் உள்­ளன.

எனினும், ஹவிஸ்­ரோ­வுக்கும் அவ­ருக்கும் இடையில் முதல் சுற்றில் பாரிய இடை­வெளி இல்­லாத நிலையில் முடி­வுகள் மாறு­வ­தற்­கான வாய்ப்பும் தென்­ப­டு­கின்­றது.

தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்ட பின்னர் தமது வெற்றி தொடர்பில் இரு­வரும் நம்­பிக்கை தரும் வகை­யி­லான கருத்­துக்­க­ளையே வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அளிக்­கப்­பட்ட மொத்த வாக்­கு­களில் இரு­வரும் 53 வீத வாக்­கு­க­ளையே பெற்­றுள்ள நிலையில் மீதி 47 வீத வாக்­கா­ளர்­களைக் கவர்ந்­தி­ழுக்க வேண்­டிய நிலையில் வேட்­பா­ளர்கள் உள்­ளனர்.

அதே­வேளை, மீதி வாக்­கு­களைப் பெற்ற வேட்­பா­ளர்கள் தமது வாக்­கா­ளர்­களை யாருக்கு வாக்­க­ளிக்கக் கோர இருக்­கி­றார்கள் என்­ப­துவும் தீர்­மா­ன­க­ர­மாக அமையும் என எதிர்­பார்க்­கலாம்.

இரு­வரில் யார் வெற்றி பெற்­றாலும் பின்­லாந்தின் அர­சியல் போக்கில் பாரிய மாற்­றங்கள் எத­னையும் எதிர்­பார்க்க முடி­யாது. வல­து­சாரிச் சித்­தாந் தத்தைப் பின்­பற்றும் இரு­வரும் வெளி­யு­றவுக் கொள்கை உட்­பட பல விட­யங்­களில் ஒத்த கருத்­தையே கொண்­டுள்­ளனர்.

அது மாத்­தி­ர­மன்றி எரியும் பிரச்­சி­னை­யான உக்ரேன் போர் தொடர்­பிலும் மேற்­கு­லக சார்பு கருத்து நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளனர்.

ரஷ்­யா­வுக்கு எதி­ரான போக்கில், நேட்­டோவில் அங்­கத்­துவம் பெற்­றதில் இருந்து உள்­நாட்டின் அர­சியல், பொரு­ளா­தார விவ­கா­ரங்­களில் கூட பாரிய கருத்து வேறு­பாடு இல்­லா­த­வர்­க­ளா­கவே இரு­வரும் உள்­ளனர்.

நாட்டின் வெளி­வி­வ­காரக் கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அடுத்த தலைவர் யார் என்­பதை இந்தத் தேர்­தலில் வாக்­கா­ளர்கள் தீர்­மா­னிக்கக் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

வெளி­வி­வ­காரக் கொள்­கையில் இரு­வ­ருமே வல்­லு­நர்கள் எனக் கரு­தப்­பட்­டாலும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராகப் பதவி வகித்த அனு­ப­வத்தைக் கொண்ட ஹவிஸ்ரோ இதில் முன்­னி­லையில் உள்ளார்.

இரு­வரில் யார் தெரி­வா­னாலும் அவ­ருக்கு அடுத்­து­வரும் 6 வரு­டங்­களில் தலை­யிடி காத்­தி­ருக்­கி­றது என்­பது மாத்­திரம் உண்மை.

உக்ரேன் போரில் ரஷ்யா வெற்றி பெற்­று­விட்டால் அது ஏனைய அயல் நாடுகள் மீது படை­யெ­டுப்பை நடத்தக் கூடும் என்ற வதந்­திகள் மேற்குலகில் வெளிவரத் தொடங்கி விட்டன.

ஐரோப்பாவினுள் நுழையும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவுடனான தனது எல்லைகளை அண்மையில் பின்லாந்து மூடியிருந்த நிலையில், ரஷ்யாவின் தொடரப் போகும் எதிர்வினைகள் மற்றொரு மோதலுக்கு வழிவகுக்குமா? நேட்டோ ஆதரவு நாடு ஒன்றுடன் ரஷ்யா மோதும் நிலை உருவானால் அது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமா? அத்தகைய ஒரு போரை உலகம் தாங்குமா?

இவை தற்போது வரை விடை தெரியாத கேள்விகள். ஆனால் இந்த ஒவ்வொரு நிலையிலும் பின்லாந்தில் புதிதாகத் தெரிவாகும் அரசுத் தலைவர் சம்பந்தப்பட்டே ஆகவேண்டும் என்பது மாத்திரம் உண்மை.

Share.
Leave A Reply