சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றியவர் சச்சின் டெண்டுல்கர்.
இந்நிலையில் தனது பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து ஸ்கூட்டரில் சென்ற ரசிகரை சச்சின் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார்.
என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. எதிர்பார்க்கபடாத இடங்களில் இருந்து கிடைக்கும் அளவற்ற அன்பு வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
அந்த வீடியோவில், சச்சின் காரில் எங்கேயோ சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பைக்கில் சச்சின் பெயருடன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
இதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரை நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டார்.
சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். உங்களிடம் பேசி அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு.
உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி என கூறினார். மேலும் சச்சின் அந்த ரசிகரை ஹெல்மெட் அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல முடிவு என கூறினார். மேலும் அந்த சச்சினின் புகைப்படங்களை தனது டைரியில் வைத்திருந்ததை எடுத்து காட்டியுள்ளார்.
அதை பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு ஒரு ஆட்டோகிராபையும் போட்டுக் கொடுத்தார். பிறகு இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அந்த ரசிகர் என் வாழ்நாளில் என்னுடைய கடவுளை நான் நேரில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என கூறினார்.
நீங்கள் என்னுடைய ஜெர்சியை அணிந்து கொண்டிருந்தீர்கள். அதை பார்த்தது தான் நான் உங்களை நிறுத்தினேன் என கூறி அந்த ரசிகருக்கு சப்ரைஸ் அளித்தார்.
மேலும் அந்த வீடியோவில் நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். அவன் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் பாலோ செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Sachin meets TENDULKAR. 😋
It fills my heart with joy when I see so much love showered on me. It is the love from the people that keeps coming from unexpected corners which makes life so special. pic.twitter.com/jTaV3Rjrgm
— Sachin Tendulkar (@sachin_rt) February 1, 2024