குறுகிய விநாடிகளுக்குள்ளாகவே மின்னல் வேகத்தில் தொடர்ச்சியாக 10 வெவ்வேறு தயாரிப்புகளையாவது காட்டிவிடுகிறார்.
டிஜிட்டல் உலகில் பல யூடிபர்களும், இன்ஃப்ளுயென்சர்களும் அன்றாடம் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். பலரும் தங்களுக்கென சோஷியல் மீடியா பக்கத்தைத் தொடங்கினாலும், வெகு சிலரே நல்ல லாபம் காண்கிறார்கள்.
சீனாவைச் சேர்ந்த Zheng Xiang Xiang என்ற பெண் வாரத்திற்கு 120 கோடி சம்பாதிக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?… இவர் பல தயாரிப்புகளை புரொமோட் செய்கிறார். மற்றவர்களைப் போல அந்தத் தயாரிப்புகளை குறித்து மணிக்கணக்கில் பேசாமல் வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.
அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள் அட்டைப் பெட்டியில் தயாரிப்புகளை வைத்து சர்ரென தள்ள அதனைக் கையில் எடுத்து கேமராவில் காட்டி அதன் விலையை மட்டும் கூறி பட்டென மறுபடியும் தள்ளி விடுகிறார்.
அவர் தள்ளிவிடும் அடுத்த விநாடியில் வேறொரு தயாரிப்புள்ள அட்டைப்பெட்டியைத் தள்ளுகிறார்கள். குறுகிய விநாடிகளுக்குள்ளாகவே மின்னல் வேகத்தில் தொடர்ச்சியாக 10 வெவ்வேறு தயாரிப்புகளையாவது காட்டிவிடுகிறார்.
சீனாவின் டிக்டாக் என அறியப்படும் `Douyin’-ல் அவருக்கு ஐந்து மில்லியன் ஃபாலோயர்கள் உண்டு. வாரத்திற்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 120 கோடி ரூபாய்) ஈட்டுகிறார். அவர் புரொமோஷன் செய்யும் பொருள்களுமே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறியுள்ளனர்.
5 நிமிடங்கள் வரை கூட ஒரு பாட்டை முழுமையாகக் கேட்காத மனநிலையில் இன்றைய காலகட்ட டிஜிட்டல் உலகம் ஓடிக் கொண்டிருக்கையில், இப்பெண்ணின் மின்னல் வேக புரொமோஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிஜிட்டல் உலகம், டிஜிட்டல் உலகம் தான் பா!