தாய்லாந்தை சேர்ந்த மூன்று ஆண்கள் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.
LGBTQ சமூகத்தை சேர்ந்த இவர்கள் மூவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.
தங்களை பொறுத்தவரை காதல் என்பது ஆறுதல் தருவது. இன்பம், துன்பம் ஆகியவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்வது தான் என கூறும் இவர்கள் தங்களது காதலும் சமூகத்தின் பிற காதல்களை போன்றது தான் என்று கூறுகின்றனர்.
இவர்களது குடும்பங்களில் முதலில் எதிர்ப்பு கிளம்பினாலும், போக போக இவர்களை புரிந்துக் கொண்டுள்ளனர்.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதை போல், LGBTQ சமூகத்தினரையும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் மூவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளவே முடியாது என்று கூறுகின்றனர் இவர்கள்.
மூன்று பேர் இடையே உள்ள உறவு என்பது மற்ற உறவுகளில் இருந்து எந்தவகையிலும் வேறுபட்டதில்லை என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும், இது ஒன்றும் ஒழுக்கக்கேடானது அல்ல. எங்களை பற்றி நீங்களே ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளும் முன் முதலில் எங்களைப் பற்றி புரிந்துகொள்ளுங்கள் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.