பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காஸாவில் இடம்பெறும் அழிவுகளை அமெரிக்கா-ஐரோப்பா ஆதரிப்பது என்பது முதல் தடவையல்ல.

இந்தப்போர் வெறியர்கள் 1948இல் டெய்ர் யாசின் மற்றும் கஃபர் காசிம் ஆகிய இடங்களில் இஸ்ரேலியர்களை குடியமர்த்துவதற்காக பலஸ்தீனர்களை தமது சொந்த வீடுகள் மற்றும் நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதற்காக இதேபோன்ற படுகொலைகளை செய்தனர். அன்று முதல் இந்த போர்க்குற்றங்கள் அவ்வப்போது தங்குதடையின்றி தொடர்கின்றன.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள காஸா விடயத்தில் கூட அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தவும், சூறையாடுவதற்குமாக அகன்ற இஸ்ரேலை உருவாக்குவதற்காக பலஸ்தீனர்களை இனச்சுத்திகரிப்பு செய்யவும், காஸாவை இஸ்ரேலுடன் இணைப்பதற்குமான ஒட்டுமொத்த திட்டத்தினொரு பகுதியாக முந்தைய இஸ்ரேலிய இனப்படுகொலைகளை வெளிப்படையாக ஆதரித்தன.

காஸாவில் இப்போது நடப்பது போலவே அன்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலின் பக்கம் சார்ந்திருந்தனர்.

உதாரணமாக, 2008 டிசம்பர் 27 அன்று இஸ்ரேலானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வழங்கிய அதிநவீன மற்றும் பேரழிவு தரும் போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி, காஸாவில் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்தது. 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டிருப்பதை ஆதரிப்பது போலவே அன்றும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலை முழுமையாக ஆதரித்தன.

22 நாட்கள் இடம்பெற்ற இந்தப்படுகொலையில,; 1334 பாலஸ்தீனியர்கன் உயிரிழந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர். 5450 பேர் காயமடைந்தனர், ஒருஇலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர், 50ஆயிரம் பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர், 4100 குடியிருப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்தனர், அமெரிக்க சர்வதேச பாடசாலை உட்பட சர்வதேச கல்வி நிறுவனங்கள் 29, உட்பட 17000 கட்டிடங்கள் சேதமடைந்தன, 92 மஜ்ஜித்கள், 1500 கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக வளாகங்கள், 20 ஆம்புலன்ஸ்கள் அழிக்கப்பட்டன. 35-60சதவீத விவசாய நிலங்கள் அழிந்ததுடன் 1.9 பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்கும் நேரம் வரைதான் இந்த அழிவு சற்று இடைநிறுத்தப்பட்டது. தனது எட்டு வருட பதவிக்காலம் முழுவதையும் முஸ்லிம் நாடுகளின் மீது படையெடுத்து முஸ்லிம்களைக் கொன்று குவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் பு~; இஸ்ரேலுக்கு நவீன அழிவு ஆயுதங்களை வழங்கியது போலவே, ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு இனப்படுகொலை மற்றும் அழிவுக்கான இராணுவ, அரசியல், இராஜதந்திர மற்றும் நிதியுதவிகளை அளித்து வருகிறார்.

அன்றைய பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் ஹமாஸ் மீது குற்றம் சாட்டினார், ஆனால் அவர் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை துளியளவாது கண்டுகொள்ளவில்லை. படுகொலையை நிறுத்துமாறு அவர் அழைப்பு விடுக்கவும் மறுத்துவிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரதமர் ரி~p சுனக் இப்போது செய்வதைப் போலவே அன்றைய பிரதமரும் அவரது அரசாங்கமும் இஸ்ரேலிய குற்றங்களுக்கு முற்றிலும் துணை நின்றார்கள்

ஐரோப்பிய யூனியனும் இஸ்ரேலை ஆதரித்தது. ரஷ்யா இஸ்ரேலிய குண்டுவீச்சுகளில் இருந்து பலஸ்தீனர்களை காப்பாற்றுவதற்கு எவ்வித செயலூக்கமான பங்கையும் எடுக்கவில்லை. சீனாவும் ர~;யாவைப் போலவே பிரதிபலிப்பைக் காட்டியது. ஒரு காலத்தில் அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களின் நண்பன் என்று அழைக்கப்பட்ட இந்தியாவும் பலஸ்தீனர்களை கைவிட்டது.

அரேபியப் பலசாலிகளாகக் கருதப்படும் எகிப்து மற்றும் சவூதி அரேபியா என்பன தமது வெள்ளை மாளிகை எஜமானரை மகிழ்விப்பதற்காக இஸ்ரேலுடன் கைகோர்த்தன. காஸாவில் பலஸ்தீனர்களை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு ஹமாஸை ஒழிக்கவும், பலஸ்தீன அதிகார சபையை ஆட்சியில் அமர்த்தவும் ஆதரவு அளித்ததற்காக எகிப்தின் ஹ{ஸ்னி முபாரக் மற்றும் சவூதி அரேபிய அப்துல்லா இருவருக்கும் ஜார்ஜ் பு~; நன்றி தெரிவித்தார். எகிப்தும் சவூதி அரேபியாவும் பலஸ்தீனர்களின் துன்பங்களை கண்டுகொள்ளாத நிலையில், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை தொடர்ந்தது.

சுமார் 325 மில்லியன் மக்கள் தொகை கொண்ட 22 அரபு நாடுகள் உள்ளன. பாரிய பொருளாதார மற்றும் 400 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களைக் கொண்ட இராணுவ சக்தி அவர்களிடம் உள்ளது. இது மேற்கில் ஆயுத உற்பத்தித் தொழிலை செழிக்கச் செய்தது. எனினும் இஸ்ரேலிய இனப்படுகொலை தொடங்கியபோது, இந்நாடுகள் பலஸ்தீனர்களை காப்பாற்ற ஒரு விரலைக் கூட அசைக்கவில்லை.

மாறாக, சிலர் வெளிப்படையாகவும் மற்றவர்கள் இரகசியமாகவும் இஸ்ரேலுடன் ஒத்துழைத்தனர். உதாரணமாக, ஜனாதிபதி ஹ{ஸ்னி முபாரக் வெளிப்படையாக, “ஹமாஸ் அகற்றப்பட்டு மஹ்மூத் அப்பாஸ் ஆட்சியில் அமரும் வரை எகிப்து காஸாவுடனான அதன் எல்லைக்கடவையை மூடியிருக்கும்”; எனவும் “இஸ்ரேலுடனான மோதலில் ஹமாஸ் வெற்றிபெறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது” என்றும் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் குழுவிடம் கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள வளர்முக நாடுகள் உதவியற்ற வெறும் பார்வையாளர்களாக இருந்தன. வெனிசுலா மற்றும் பொலிவியா மட்டுமே இஸ்ரேலிய இனப்படுகொலையை கண்டித்ததுடன், இஸ்ரேலிய தூதரக பணிகளை தடுத்தி நிறுத்தி, அங்குள்ள இஸ்ரேலிய தூதுவர்களை வெளியேற்றின.

இலண்டனில் இருந்து உதவிக் குழுக்கள் வந்தன. பலஸ்தீனர்களுக்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களை கொண்டு வந்ததன் மூலம் மேற்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இஸ்ரேலுக்கு சவால் விடுத்தனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் காலோவே, பிரித்தானிய பத்திரிகையாளர் யுவோன் ரிட்லி மற்றும் பலர் காஸாவுக்கான உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு 100இக்கும் மேற்பட்ட வாகனங்களின் உதவித் தொடரணியுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக பயணம் செய்தனர். இருப்பினும் அரபிய உதவித் தொடரணிகள் எதுவும் வந்து சேரவில்லை.

தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தலைமையிலான நான்கு உறுப்பினர்கள் கொண்ட உண்மையை கண்டறியும் குழுவானது 2008 டிசம்பர் 27 முதல் 2009 ஜனவரி 18 வரையிலான காலப்பகுதியில் காஸாவில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் அனைத்து மீறல்களையும் விசாரிக்க மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டது.

2009 செப்டெம்பரில், 575பக்கங்கள் கொண்ட ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் அறிக்கை காஸா பகுதியில் இஸ்ரேலானது, போர்க்குற்றங்கள்; புரிந்த அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தியது. இஸ்ரேல் இந்த அறிக்கையைக் கண்டு நன்றாக அச்சமுற்று, அதனை இழிவுபடுத்துவதற்கு அதன் அனைத்து இராஜதந்திர மற்றும் அரசியல் வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. எவ்வாறாயினும், அந்த அறிக்கை இன்னும் கிடப்பிலேயே உள்ளது.

மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேலின் குற்றங்களை காஸாவில் புதைக்க உதவியதனூடாக பலஸ்தீனர்களை விற்றுவிட்டார். அப்பாஸ{டன் நெருங்கிய தொடர்புடைய தொழிலதிபர்களின் அற்ப இலாபத்திற்காக காஸாவில் இஸ்ரேல் அதன் இரத்தம் தோய்ந்த கைகளை கழுவிக்கொள்வதற்கு பலஸ்தீன அதிகாரசபை உதவியது.

எவ்வாறாயினும், இஸ்ரேலிய அச்சுறுத்தலின் இன்னும் நயவஞ்சகமான வடிவத்தை அம்பலப்படுத்தும் ‘~ஹாப் செய்தி நிறுவனம், வொ~pங்டனில் உள்ள பலஸ்தீன அதிகாரசபை ஃ பலஸ்தீன விடுதலை இயக்க பிரதிநிதிகள் கோல்ட்ஸ்டோன் அறிக்கையின் மீதான விரைவான நடவடிக்கைக்குரிய ஆதரவைக் கைவிடும்படி வற்புறுத்தப்பட்டதாகக் கூறியது. அப்பாஸ் மற்றும் ஒரு முக்கிய பாதுகாப்பு உதவியாளரான தய்யிப் அப்துல்-ரஹீம், இருவரும் இஸ்ரேலின் தலைவர்களை காஸா மீதான தாக்குதலைத் தொடரவும் மேலும் அதிகரிக்கவும் வலியுறுத்திய காணொளியொன்றையும் குரல்பதிவொன்றையும் வெளியிட்டது.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முழு ஆதரவுடன் காஸாவில் மிகமோசமான இனப்படுகொலை மற்றும் அழிவை செய்து வருகிறது, அதேநேரத்தில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளனர். சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் பின்பும் வொ~pங்டன் மற்றும் ஐரோப்பாவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் ஜாம்பவான்கள் என்று அழைக்கப்படுபவர்களின் முழு ஆதரவுடன் இஸ்ரேலானது பலஸ்தீனில் பிறந்த பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், பதின்வயதினர், ஆண்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களை படுகொலை செய்வது தொடர்கின்றது.

லத்தீப் பாரூக்:  Virakesari

தமிழில் : பிருன் நதா மன்சூர்

Share.
Leave A Reply