கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு – கிராண்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய ருவன் குமார என்ற இளைஞராவார்.
இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.