போலியான கிரேக்க வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற நாத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரையும் அவரது குடும்பத்தினரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து பஹ்ரைன் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்குச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகமடைந்த குடிவரவு, குடியகல்வு புலனாய்வுப் பிரிவினர், அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்ததில், ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபா கொடுத்து தரகர் ஒருவரிடம் கிரேக்க போலி விசா பெற்றிருப்பது தெரியவந்தது.