நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் அவை உணரக்கூடிய இடங்கள் பற்றிய படம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply