உலகின் பணக்கார செல்லப்பிராணியாக ஆறாம் குந்தர் என்ற வளர்ப்பு நாய் கருதப்படுகிறது.
இந்த நாயானது, ஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என்று செல்வந்த மனிதர்களுக்கு இணையாக வாழந்து வருகிறது.
குறிந்த செல்வந்த நாய், பாடகி மடோனா முன்னர் வாழ்ந்து வந்த வீட்டில் தற்போது வாழந்து வருகிறது.
ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த இந்த நாயின் வீடானது, 65 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீடாகும். இந்நிலையில், ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு, 300 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.
அதேவேளை, குந்தனின் முன்னாள் உரிமையாளரான செல்வந்தரான Karlotta Leibenstein என்னும் ஜேர்மானிய சீமாட்டி, தான் மரணமடையும் நேரத்தில் தனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லாததால், தன்சொத்து முழுவதையும் தான் மிகவும் நேசித்த தனது செல்லப்பிராணியாகிய குந்தனுக்கு எழுதிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.