ரஜினிகாந்த் கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், 90-களில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய், முரளி உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன் முன்பு இருக்கையில் அமர மறுத்த இயக்குனர் ஒருவர் தரையில் அமர்ந்து கதை சொல்லி ஒரு ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.

1952-ல் வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன், குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துவி்ட்ட நிலையில், தனது நடிப்பு திறமையின் மூலம் பல ஹிட் படங்களையும் தனது நடிப்பில் பல்வேறு வித்தியாசங்களையுளும் வெளிப்படுத்தி அசத்தியவர். அதே சமயம் வயது ஆக ஆக இளம் நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.

ரஜினிகாந்த் கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், 90-களில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய், முரளி உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

அந்த வகையில், நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

பிரிந்திருக்கும் 2 குடும்பங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒரு கேரக்டரில் சிவாஜி நடித்திருந்தார்.

இந்த படத்த ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதையை அவர், சிவாஜி கணேசனிடம் சொல்ல அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

போகும்போது ஒரு நடிகருக்கு கதை சொல்ல போகிறோம் என்ற எண்ணத்துடன் சென்ற வெங்கடேஷ் சிவாஜி வீட்டு வாசலை மிதித்தவுடன், மனதிற்கும் சற்று பயத்துடன் சென்றுள்ளார்.

அதன்பிறகு உள்ளே சென்றவுடன், சிவாஜி தனக்கே உரிதாக கம்பீர குரலில், யாரோ ஒருவரை அழைக்க அப்போதும் வெங்கடேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளார்.

அவர் உடன் வந்தவர், இவர் தான் வெங்கடேஷ் இயக்குனர் என்று அறிமுகம் செய்து வைக்க, எனக்கு எதோ கதை வச்சிருக்கீங்களாமே என்று கேட்க, ஆமாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு சிவாஜி உட்காருங்க என்று சொல்ல, வெங்கடேஷ் தரையில் அமர்ந்துள்ளார்.

ஏன் தரையில் அமர்ந்தீங்க, இருக்கையில் உட்காருங்க, அப்புறம் இயக்குனரை தரையில் அமர வைத்து கதை கேட்டுள்ளார் என்று பலர் சொல்வார்கள் என்று சிவாஜி சொல்ல, இல்லப்பா, நான் எங்க ஊரில் தியேட்டரில் சேரில் அமர்ந்து உங்களை மேல்நோக்கி பார்த்தேன்.

இப்போது உங்களுக்கு சரி சமமாக உட்கார்ந்தால் என்னால் கதை சொல்ல முடியாது. அதனால் நான் தரையில் உடகார்ந்து உங்களை மேலே பார்த்தால் தான் கதை சொல்ல வரும் என்று கூறியுள்ளார்.

அவரின் பேச்சை கேட்ட சிவாஜி, சிறிய புன்னகையுடன் கதை சொல்லுமாறு கூறியுள்ளார். பூப்பறிக்க வருகிறோம் என்ற இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த தகவலை ஏ.வெங்கடேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply