மார்ச் 11-ஆம் தேதி அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்தியா.
ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஒடிஷாவில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவு என்றழைக்கப்படும் சிறிய தீவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அக்னி-5 ‘எம்.ஐ.ஆர்.வி’ எனப்படும் ‘மல்டிபிள் இன்டிபென்டெண்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி’ தொழில்நுட்பத்துடன் கூடியது. இது பல இலக்குகளைத் தாக்குவதற்தாக்குவதற்கான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஒரே ஏவுகணையைக் குறிக்கும்.
உலகில் ஒரு சில நாடுகளே இந்த தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் நிலையில் இது இந்தியாவுக்கு ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, ஒரு நாடு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல இலக்குகளை ஒரே ஏவுகணை மூலம் குறிவைத்துத் தாக்க முடியும்.
இதுகுறித்த முழுமையான விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.