இங்க மழை பெய்யுது. இப்போ 8 டிகிரி செல்சியஸ் தான் இருக்கு. ஹனிமூன் யாராவது வரணும் நினைச்சா இங்க வாங்க. குளுகுளுன்னு இருக்கு…
சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி சமீபத்தில் குடும்பத்தினருடன் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சுற்றிப் பார்த்த போது எடுத்த வீடியோவை தன் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
‘நாங்க ஜெர்மனி வந்துருக்கோம். நாளைக்கு ஷோ இருக்கு. இந்த ஊரே ஏசி மாதிரி இருக்கு. இங்க மழை பெய்யுது. இப்போ 8 டிகிரி செல்சியஸ் தான் இருக்கு. ஹனிமூன் யாராவது வரணும் நினைச்சா இங்க வாங்க. குளுகுளுன்னு இருக்கு,
நாங்க இன்னைக்கு Frankfurt சுத்திப் பார்க்க போறோம். Frankfurt மெயின் டவர்ல இருந்து கீழே பார்த்தா முழு ஜெர்மனியும் தெரியும்’, இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை ஷிவாங்கி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
ஜெர்மனி
ஐரோப்பா கண்டத்தில் உள்ள உலக வரலாற்றில் ஜெர்மனிக்கு எப்பொழுதும் உயர்ந்த இடம் உண்டு!
வடக்கே வட கடல், டென்மார்க், பால்டிக் கடல், கிழக்கே போலந்து, செக் குடியரசு, தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, மேற்கே பிரான்ஸ், லக்சபேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை ஜெர்மனியின் எல்லைகளாக அமைந்துள்ளன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பெர்லின் திரைப்பட விழா, ஃபிராங்க்பர்ட் புத்தகத் திருவிழா ஆகியவை ஜெர்மனி நாட்டின் முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.
பொதுவாக ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் இறுதி வரை பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் ஜூலை கடைசி இரு வாரங்கள்,ஆகஸ்ட் மாதம் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை என்பதால் பிரபல சுற்றுலா தளங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும், விடுதிகள் கிடைப்பதும் சிரமமாக இருக்கும்.
அதே போல் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் குளிர் காலத்தை (நவம்பர்-பிப்ரவரி) தவிர்ப்பது நல்லது, அப்போது சில சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கும்.
நகரங்களை பொறுத்த வரை கோடை காலங்களில் சூரிய அஸ்தமிக்க குறைந்தது இரவு 8 மணி ஆகும் அதனால் நிறைய நேரம் Sightseeing போகலாம்.
அருகில் உள்ள நாடுகள் என்ன? Schengen விசா இருக்கும் பட்சத்தில் 26 நாடுகளுக்கு செல்லலாம். ஒரு 10-15 நாட்கள் விடுமுறைக்காக வருகிறீர்கள் என்றால் இத்தாலி, பிரான்ஸ், சுவிசர்லாந்து, ஆஸ்திரியா,நெதர்லாந்து ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.