ஜேர்மனுக்கு இம்மாத நடுப்பகுதியில் விஜயம் செய்த மலேசியப் பிரதமர் இடதுக் செரி அன்வர் இப்ராஹீம், காஸாவில் இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்காததை கடுமையாக விமர்சித்தார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் அட்டூழியங்களில் இருந்து மக்களை விடுவிக்கப் போராடும் ஹமாஸுடனான தனது நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதத்தில் உறுதியான ஆதரவையும் தெரிவித்தார்.
இஸ்ரேல் பல தசாப்தங்களாக “அட்டூழியங்கள் புரிதல், சூறையாடல், பலஸ்தீனர்களை பலவந்தமாக வெளியேற்றுதல்” என்பவற்றை மேற்கொள்வதாக பிரதமர் அன்வர் கூறினார்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவானது இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் மலேசியர்கள் பலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்கான நியாயமான போராட்டத்தை கடுமையாக ஆதரிக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலுக்குப் பின் காஸாவில் ஹமாஸுக்கெதிரான இஸ்ரேலின் பதிலடியை ஆதரித்த ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இணைந்து பெர்லினில் செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹீம் பேசும் போது இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையிலான மோதல் 2023 ஒக்டோபர் 7இல் தொடங்கவில்லை என்றும், பிரச்சினை பற்றிய வரலாற்றைத் திரிபுபடுத்தும் கதையாடலை தான் நிராகரிப்பதாகவும் கூறினார்.
காஸாவில் இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலுக்கு ஜேர்மன் அளித்துவரும் ஆதரவிற்கு பதிலளிக்கும் விதமாக, அன்வர் இப்ராஹீம் 60ஆண்டுகளாக பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய அடக்குமுறையை கோடிட்டுக்காட்டியதோடு “இவ்வளவு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதனூடாக நீங்கள் ஒரு தீர்வை எட்டவே முடியாது என்றும் கூறினார்.
பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களையும் காஸாவில் பலஸ்தீனர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதையும் கண்டும் மேற்கத்திய நாடுகள் கண்களை மூடிக்கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் அன்வர் இப்ராஹீம் ஹமாஸுடனான மலேசியாவின் உறவுகளை ஆதரித்துப் பேசினார்.
பலஸ்தீன சுதந்திரப் போராளிகளான ஹமாஸுடன் தனது தேசத்தின் வரலாற்றுத் தொடர்புகளுக்கு “மன்னிப்பு கேட்பதற்கு எதுவும் இல்லைரூஙரழவ் என்றார்.
காஸா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலை முஸ்லிம் உலகில் கடுமையாக விமர்சிப்பவர்களில் அன்வர் ஒருவராக இருந்து வருகிறார். இத்தாக்குதல் காஸாவின் மொத்த அழிவுக்கும் அப்பால் இதுவரை 31,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட ஒன்றாகும்.
“நாம் எமது மனிதாபிமானத்தை எங்கு வீசி எறிந்தோம்? ஏனிந்த நயவஞ்சகத்தனம்?” என்று கேள்வியெழுப்பிய அன்வர் இப்ராஹீம், மேற்கத்திய நாடுகள் தமது ‘பக்கச்சார்பு’ மற்றும் “இரட்டை நிலைப்பாடு” என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.
“நாங்கள் காலனித்துவம், நிறவெறி, இனச் சுத்திகரிப்பு அல்லது உக்ரைன், காஸா போன்று எந்த நாட்டையும் அழிவுக்குட்படுத்துவதை எதிர்க்கிறோம்.
60 ஆண்டுகால அடாவடித்தனங்களையும், அழிவுகளையும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்திய அட்டூழியங்களையும் எங்களால் மறந்துவிட முடியாது” என்றார்.
ஸ்கோலோஸ் தன் பங்கிற்கு ஜேர்மன் இஸ்ரேல் விடயத்தில் ஒரு விசேட பொறுப்பைக் கொண்டுள்ளது. ஹமாஸுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேலுக்கான உரிமையை ஆதரிக்கிறது என்றார்.
பத்திஎழுத்தாளர் ஜெரோம் ஸ்கேஹில் இஸ்ரேலின் இனப்படுகொலை தொடர்பில் கண்மூடித்தனமான மேற்கத்திய ஆதரவைக் கையாள்வது குறித்து ‘இன்டர்செப்டட்’ என்ற இணையதளத்தில் இந்த படுகொலையைத் தொடர அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை இஸ்ரேலுக்கு வழங்குகிறது எனக் கூறினார்.
அமெரிக்கா தலைமையிலான உலகின் பலம் வாய்ந்த நாடுகள் வெறுமனே ஆயுதங்கள் மற்றும் அரசியல் ஆதரவை மட்டும் இஸ்ரேலுக்கு வழங்கவில்லை. மாறாக இப்போது அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் காஸாவிற்கு செல்வதைக் கட்டுப்படுத்தும் பிரச்சாரத்திலும் இணைந்துள்ளது.
காஸாவில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கான முகவரகத்திற்குரிய நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு பைடன் நிர்வாகம் குற்றச்சாட்டுடன் முன்னிற்கிறது.
ஹமாஸின் முன்னணி செயற்பாட்டாளர்களென ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றை ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கான முகவரகத்துக்கு எதிராக கொண்டுவந்து ஓர் அவதூறு பிரசாரத்தை இஸ்ரேல் முன்வைக்கின்றது.
அறிக்கைகளின்படி மார்ச் முதல் வாரம் வரை 32,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். மேலும் 66,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இப்புள்ளிவிபரங்கள் ஒரு வகையில் குறைவான மதிப்பீடாகவும் இருக்கலாம்.
ஆயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் ஒரு காலத்தில் தங்கள் வீடுகளாக இருந்த இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி மரணித்திருக்கவும் கூடும்.
காஸாவின் 80 சதவீதத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இப்போது உள்ளக இடம்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். எகிப்திய எல்லையில் உள்ள ரஃபாவை இஸ்ரேலியர்கள் முற்றுகையிடத் தொடங்குவதால், எப்போதும் குண்டுவீச்சு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொலைக் கூண்டில் அகப்பட்டுள்ளனர்.
காஸாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள், அதன் சுகாதார மையங்கள், அதன் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களை இஸ்ரேல் திட்டமிட்டு அழித்துள்ளது.
சுற்றுச்சூழலை முற்றாக அழிப்பது, அடுக்குமாடி குடியிருப்புகளைத் தகர்ப்பது, பண்ணைகள் மற்றும் பிற விவசாய நிலப் பகுதிகளை அழிப்பது போன்றவற்றில் அது ஈடுபட்டுள்ளது.
காஸாவின் 60 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது குறிப்பிடத்தக்க அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பெருந்தொகையான கைதிகளை கொலைசெய்தல் மற்றும் பிற பலஸ்தீனர்களை பரவலாக சித்திரவதைக்குள்ளாக்குதல் பற்றிய செய்திகள் உள்ளன.
கஸ்ஸாம் படையணிகள் மற்றும் பிற பலஸ்தீனப் போராளிகளுக்கு எதிரான இராணுவப் போரில் அவர்களது இராணுவப் படைகள் புதைகுழியையே எதிர்கொண்டாலும் கூட நெதன்யாகுவும் அவரது அடியாட்களும் தங்கள் பிரச்சாரத்தை காலவரையின்றித் தொடர விரும்புவதாகப் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பத்தி எழுத்தாளர் டொனால்ட் ஏர்ல் காலின்ஸ், மேற்கத்திய நாஸிஸமும் இனப்படுகொலை இஸ்ரேலுக்கான ஆதரவும் ஒன்றாக கைகோர்த்துச் செல்கின்றன என்றார். மேற்கின் நாகரிக மேன்மை பற்றிய போலியான நம்பிக்கைகள் காஸாவில் இனப்படுகொலையை ஆதரிக்கும் அதேவேளையில் மேற்கானது வரலாற்றின் சரியான பக்கத்தில் இருப்பதாக உரிமை கொண்டாட உதவுகின்றன.
நிறவெறி, குடியேற்ற – காலனித்துவம் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை அனுமதிக்கும் வெள்ளையின மேலாதிக்க சித்தாந்தத்தை 50 ஆண்டுகளாக கடைப்பிடிப்பவர் என்று ஓர் உலகத் தலைவர் தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு ஒரு சிறப்பு வகையான நாஸிஸம் தேவை.
அமெரிக்கா அதன் அனைத்து மகத்துவத்திற்கும் மீண்டும் திரும்புவதற்குரிய சாத்தியக்கூறுகள் பற்றியும் கடந்த 130 ஆண்டுகளாக அமெரிக்கா உலகம் முழுவதும் வன்முறையற்ற முறையில் மந்திரப்பொடியை மட்டும் தூவுவது போலவும் ரூபவ் அதன் மிருகத்தனமான இராணுவ மற்றும் பொருளாதார சக்தியுடன் தலையிடாமல் இருந்து வருவது போலவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தனது சுய மாயையில் தன்னந்தனியராக இல்லை. கடந்த மாதம் லண்டனில் நடந்த இஸ்ரேலின் பாரம்பரிய நண்பர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் காஸா மற்றும் மேற்குக்கரை மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு தனது அசைக்க முடியாத ஆதரவைக் காட்டினார்.
இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வழக்கை “முற்றிலும் நியாயமற்றது” என்று முத்திரை குத்தியதோடு, “இஸ்ரேலில் மீது அனைத்து நாடுகளும் இனப்படுகொலை குற்றம் சாட்டியதில் ஒரு பயங்கரமான வேடிக்கை உள்ளது” என்றும் கூறினார்.
‘பயங்கரமான வேடிக்கை’ என்னவென்றால், இஸ்ரேல் ஒரு மேற்கத்திய அணியைச்சார்ந்த நாடாக இருப்பதால் இனப்படுகொலை என்று குற்றம் சாட்ட முடியாது.
ஏனெனில் அது ‘நல்லவர்களில’ ஒருவராகும். ‘கெட்டவர்கள்’ என்று தென்னாப்பிரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் சாராத (உண்மையில், வெள்ளையர் அல்லாத) நாடுகளாக மட்டுமே இருக்க முடியும்.
உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் எதிர்ப்பு மற்றும் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்களின் மரணங்கள், காஸா மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்கள், சூடானில் நடந்து வரும் போரையும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெறும் மோதல்களையும் முழுவதுமாக புறக்கணித்த நிலையில் மேற்கத்திய முதலாளித்துவமும் ஜனநாயக அமைப்புகளும் உலகைக் காப்பாற்றும் என்று மேற்கத்தியத் தலைவர்கள் இன்னுமே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
லத்தீப் பாரூக்
தமிழில் : பிஷ்ருன் நதா மன்சூர்