அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கிறிஸ்தவ தேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தேவாலயத்திற்கு வெளியே கலவரம் மூண்டுள்ளது.
.சிட்னியில் கிறிஸ்தவதேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
மார் மரி இமானுவெல் என்ற ஆயர் ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் அவரை நோக்கி பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் அங்கு காணப்பட்டவர்கள் மீதும் அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
BREAKING: Thousands of angry protesters have surrounded the Wakeley church and chanting ‘bring him out’ after mass stabbing attack in Sydneypic.twitter.com/MupeOEQ4ra
— Insider Paper (@TheInsiderPaper) April 15, 2024
நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்திற்கு வெளியே திரண்டுள்ள பெருமளவு மக்கள் கத்திக்குத்தில் ஈடுபட்டவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருவதுடன் பொலிஸாரின் வாகனங்களை தாக்கிவருகின்றனர்.
கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் குறிப்பிட்ட தேவாலயத்திற்குள் வைத்திருக்கின்றனர் சுமார் 5000க்கும் அதிகமானவர்கள் அந்த தேவாலயத்தை சூழ்ந்துள்ளனர்.
அசிரியன் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள்ளேயே மதகுரு தாக்கப்பட்டுள்ளார் இதனை தொடர்ந்து 5000க்கும் அசீரியன் கிறிஸ்தவர்கள் தேவாலயத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என கோரி வருவதுடன் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.