“கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர்.

இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.\”பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. தெனிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற “அரபிக் குத்து” இருந்தது.

தற்போது அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடித்து கோட் படத்தின் விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது.இதன் மூலம் அவர் பட பாடலின் சாதனையை அவரே அடுத்தப்பட பாடலின் மூலம் முறியடித்து இருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Share.
Leave A Reply