பிரித்தானியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கே ரிஷி சுனக் தலைமையிலான அரசு, மிக மோசமான தோல்வியை அடைய வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், கடந்த 27 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான தோல்வியை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சந்திக்கப் போகிறது.

இதில் ஆளும் தரப்புக்கு மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் கூட அவரது சொந்த தொகுதியில் வெல்வது கடினமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். கொரோனா பரவலின் பின் இக்கட்டான சூழலில் 2022இல் அவர் பிரதமர் பதவிக்கு வந்தார்.

எதிர்வரும் தேர்தலில், கன்சர்வேட்டிவ் (conservative) கட்சியின் 15ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருமென கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்குமென கூறப்படுகின்றது.

பிரித்தானியாவில் இவ்வாண்டு இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, என்பது குறித்து ‘பெஸ்ட் ஒப் பிரிட்டன்’ (best of britin) நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், தற்போது தேர்தல் நடத்தப்பட்டால், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடு முழுவதும் 250உறுப்பினர்களை இழக்க நேரிடுமென கூறப்படுகின்றது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைவிட, 19 புள்ளிகள் முன்னிலையுடன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை கணிப்பில் பெற்றுள்ளது. எதிர்கட்சிக் கட்சியான தொழிலாளர் கட்சி 468 இடங்களை பெற்று வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆயினும் பிரித்தானியாவில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு பொதுத்தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய உள்ளது.

பிரித்தானியா பாராளுமன்ற கீழவையான ஹவுஸ் ஒப் கொமன்ஸ் 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 365இடங்களில் வெற்றிபெற்;று ஆட்சியை பிடித்தது.

Former U.K Prime Minister Boris Johnson,I,  and former U.K. Prime Minister Liz Trusscurrent,  current U.K. Prime Minister Rishi Sunak

ஆட்சியை பிடித்தாலும் பல சர்ச்சையில் சிக்கி மூன்று பிரதமர்களை மாற்றும் நிலைக்கு கன்சர்வேட்டிவ் கட்சி சென்றது. பாலியல் வழக்கில் சிக்கியவரை அரசாங்கத்தில் நியமித்தது, கொரோனா விதிகளை மீறியது என்று போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக புகார் எழுந்த நிலையில், தனது பிரதமர் பதவியை அவர் இராஜினாமா செய்தார்.

போரிஸை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக பதவியேற்ற 6 வாரங்களில் பதவி விலகினார். இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் பல சவால்களை கடந்து அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார்.

தற்போது பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போதய அமைச்சரவையில் உள்ள 28 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு போட்டியிடுவார்களாயின், அவர்களில் 13பேர் மட்டுமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்களென கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆளும் தரப்பை ஆட்டம் காண வைப்பதாக இருக்கிறது.

இந்தாண்டு இறுதியில் அங்கே பாராளுமன்றத் தேர்தல் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடையும் என்றே அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

 British Prime Minister Rishi Sunak

இதில் ஆளும் தரப்புக்கு மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் கூட அவரது சொந்த தொகுதியான ரிச்மண்ட் வடக்கு யார்க்ஷயரின் தொகுதியில் வெல்வது கடினம் என்பது தான்.

இந்த கணிப்பின்படி எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. தொழிலாளர் கட்சி 45சதவீத வாக்குகளைப் பெறும் எனக்கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 26சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது கன்சர்வேடிவ்களை விட 19சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தொழிற்கட்சி பெறுமெனக் கூறப்பட்டுள்ளது.

இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தொழிலாளர் கட்சி 468 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதுடன், ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளப் போகும் கன்சர்வேடிவ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியைச் சந்திக்க இருக்கிறது.

அவர்கள் 100க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாக இன்னோர் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி நாடு முழுவதும் மிக மோசமான தோல்வியை அடையும். தொழிலாளர் கட்சி 468இடங்களைப் பெற்று வெற்றி பெறும் ஒரு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி இதுவரை இப்படியொரு தோல்வியைச் சந்தித்ததே இல்லை.

அத்துடன் கன்சர்வேடிவ் கட்சியின் மோசமான நிலை அத்துடன் நிற்கவில்லை. பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் தொகுதியில் கூட போட்டி மிகமிக நெருக்கமாக இருக்கிறது. அங்கே தொழிலாளர் கட்சி ரிஷி சுனக்கை விட வெறும் 2.4 சதவீதம் தான் பின்தங்கிய இருக்கிறது. எனவே, அங்கே எப்போது வேண்டுமானாலும் நிலைமை மாறலாம் எனக்கூறப்படுகிறது.

இன்னோர் கருத்துக் கணிப்பு அமைப்பான ‘யூகோவ் நிறுவன’ ஆய்வின் முடிவுகளின்படி, மொத்தமுள்ள 650இடங்களில் 403 இடங்களை கைப்பற்றி தொழிலாளர் கட்சி சாதனை படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 155இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கீழவையில் கன்சர்வேட்டிவ் குழு தலைவராக பதவி வகித்து வரும் பென்னி மோர்டான்ட், முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் ஆகியோரும் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Share.
Leave A Reply