கடன் பெறும் நோக்கில் சக்கர நாற்காலியில் வைத்த 68 வயது மாமனாரின் சடலத்தை சக்கரநாற்காலியில் வைத்து தள்ளியவாறு வங்கிக்கு வந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்.பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
ககடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற. இந்த சம்பவம் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளன.
போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த நபர் நஞ்சூட்டத்துக்கு ஆளாகியிருக்கலாம் என நம்பப்படு.வதாகவும் அவருக்கு முன்னர் ஏற்பட்டிருந்த.இருதய நோயும் அவரது மரணத்துக்குப் பங்களிப்புச்செய்திருக்கலாம் என நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எறிகா டி சோஸா (42 வயது) என்ற மேற்படி மருமகள் தனது மாமனாரான போலோ பிரகாவின் சடலத்தை சக்கர நாற்காலியில் வங்கிக்குத் தள்ளி வந்து 17,000 ரெய்ஸ். (சுமார் 9.8 இலட்சம் ரூபா) கடனைப் பெறுவதற்காக அவரிடம் கையொப்பமொன்றைப்
பெற முயற்சித்துள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்
பட்டுள்ளார்.
ஆரம்ப கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரகாவுக்கு மூச்சுக்குழாய் மற்றும்.’இருதய செயலிழப்பு என்பவற்றால் உமிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றநிலையில் அவருக்கு
‘நஞ்சூட்டப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மேலதிக பரிசோதனையொன்று மேற்கொள்ளப்ப.டவுள்ளதாக அதிகாரிகள்.கூறுகின்றனர்.
மேற்படி சம்பவத்தின்போது வங்கி ஊழியர் ஒருவரால் படமாக்கப்பட்ட காணொளிக் காட்சியானது பிரகாவின் தலை ஒரு பக்கமாக சரிந்திருக்க டி சோஸா பேனை’யொன்றை அவாது கரத்துக்குள் திணித்து அந்தக்கரத்தை கையொப்பமிடுவதற்காக அசைப்.பதை வெளிப்படுத்தகிறது.
இதன்போது டி சோஸா , “மாமா நான் கூறுவது கேட்கிறதா? நீங்கள் கையொப்பமிடவேண்டியுள்ளது “எனக் கூறியுள்ளார்.
வங்கி உத்தியோகத்தர் ஒருவர் அந்தப்பெண்ணை விசாரிக்க முற்படவும் அவர்
தனது மாமனார் எதுவும் கூறமாட்டார் எனவும் அவர் அவ்வாறு தான் சற்று நேரமாக உள்ளார் எனவும் வங்கி உத்தியோகத்தருக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் மாமனாரை நோக்கி “உங்களுக்கு நிலைமை ‘சரிமில்லை எனில் நான் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன்” என்று,கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகம்கொண்ட வங்கி உத்தியோ
சத்தர்கள், பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வரவமைக்கப்பட்ட மருத்துவ உத்தியோகத்தர்கள்
அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சையை அளிக்க முற்பட்ட போது அவர் இறந்து இரு மணி நேரத்திற்கும் மேலாகிமிருப்பது கண்டறியப்பட்டது.
தனது மாமனார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து முதல் நாள் திங்கட்கிழமை அழைத்து வரப்பட்டிருந்ததாகவும் வங்கிக்கு வரும் பொது அவர் உயி!
டன் இருந்ததாகவும் பொலிஸாருக்கு டி’சோஸா தெரிவித்துள்ளார்.
தான் புதிய தொலைக்காட்சியொன்றைவாங்கவும் திருத்த வேலைகளுக்கான
செலவை ஈடுசெய்யவும் கடன்பெறவந்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பில் வாடகை வாகன சாரதியொருவர் தெரிவிக்கையில் பிரகாவை
தான் வீட்டிலிருந்து அழைத்து வருவதற்கு உதவியதாகவும் இதன்போது அவர்
உமிருடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து,பொலிஸார்… தீவிர விசாரணகளை
மேற்கொண்டுள்ளனர்.