ஈரான்மீது இஸ்ரேல் நடத்­தி­ய­தாகக் கூறப்­படும் பதி­ல­டி­யா­னது ‘ஒரு தாக்­கு­தலே அல்ல’ என ஈரான் விமர்­சித்­துள்­ளது. அது சிறு­வர்­களின் விளை­யாட்டைப் போன்­றது என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடை­யி­லான போர் அபாய அச்­சத்தை தணிப்­ப­தாக இக்­க­ருத்­துகள் உள்ளன.

சிரி­யா­வி­லுள்ள ஈரா­னிய துணைத்­தூ­த­ர­கத்தின் மீது இஸ்ரேல் கடந்த முதலாம் திகதி நடத்­திய தாக்­கு­தலில் ஈரா­னிய இரா­ணுவ அதி­கா­ரிகள் உட்­பட பலர் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக இஸ்ரேல் மீது கடந்த 13 மற்றும் 14ஆம் திக­தி­களில் சுமார் 300 ஆளில்லா விமா­னங்கள்இ ஏவு­க­ணை­களை ஈரான் ஏவி­யது. இவற்றில் 99 சத­வீ­த­மா­னவை சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தா­கவும் இஸ்­ரே­லுக்கு சிறிய பாதிப்­பு­களே ஏற்­பட்­ட­தா­கவும் இஸ்ரேல் தெரி­வித்­தி­ருந்­தது.

எனினும் இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக ஈரான் மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை (19) அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­தது. அன்­றைய தினம் ஈரானின் இஸ்­பஹான் நகரில் வெடிப்புச் சத்­தங்கள் கேட்­ட­தாக செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது.

3 சிறிய ஆளில்லா விமா­னங்கள் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தாக ஈரா­னிய அதி­காரி ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

ஈரான்மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா கூறிய போதிலும் அத்­தாக்­கு­தலை தான் நடத்­தி­ய­தாக இஸ்ரேல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­ந­ட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயுதம் தொடர்­பிலும் முரண்­பா­டான தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அது ஏவு­கணைத் தாக்­­குதல் என அமெ­ரிக்கா தெர­ிவித்­தி­ருந்­தது. எனினும் ஆளில்லா விமா­னங்­களை (ட்ரோன்­கள்) சுட்­டு­வீழ்த்­தி­ய­தாக ஈரான் கூறு­கி­றது.

இந்­நி­லையில் இது ஒரு தாக்­கு­தலே அல்ல என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஹொஸைன் அமீர் அப்­துல்­லா­ஹியன் கூறி­யுள்ளார்.

பதில் தாக்­குதல் திட்­ட­மில்லை

அமெ­ரிக்­காவின் என்.பி.சி. அலை­வ­ரி­சைக்கு வெள்­ளிக்­கி­ழமை அளித்த செவ்­வி­யொன்றில் இது தொடர்­பாக அவர் கூறு­கையில்இ

‘நேற்­றி­ரவு நடந்­தது தாக்­குதல் அல்ல. அது ஈரானில் எமது சிறு­வர்கள் பயன்­ப­டுத்தும் விளை­யாட்டுப் பொரு­ளான ‘குவாட்-­-கொப்­டர்’­க­ளுக்கு இடை­யி­லான மோதலைப் போன்­றது. அவை ஆளில்லா விமா­னங்கள் அல்ல’ என வெள்­ளிக்­கி­ழமை அவர் கூறி­யுள்ளார்.

ஐ.நா. பாது­காப்புச் சபை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்­காக நியூ யோர்க்­குக்கு சென்­றி­ருந்த நிலையில் அமைச்சர் அப்­துல்­லா­ஹியன் இந்த செவ்­வியை அளித்­துள்ளார்.

இஸ்ரேல் குறிப்­பி­டத்­தக்­க­வொரு தாக்­கு­தலை நடத்­தினால் தவிர, இஸ்ரேல்மீது பதில் தாக்­குதல் நடத்தும் திட்டம் ஈரா­னிடம் இல்லை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

ஆனால்இ ஈரான்மீது இஸ்ரேல் தாக்­குதல் நடத்­தினால் ஈரானின் பதி­லடி துரி­த­மா­கவும் கடு­மை­யா­கவும் இருக்கும் என அவர் கூறினார்.

அதே­வேளைஇ இஸ்ரேல்மீது ஈரான் நடத்­திய ஏவு­கணை, ஆளில்லா விமானத் தாக்­குதல் ஓர் எச்­ச­ரிக்கை நோக்­க­மு­டை­யது எனவும் அமைச்சர் அப்துல்லாஹின் கூறினார்.

‘எம்மால் (இஸ்ரேலிய நகரங்களான) டெல் அவிவ் அல்லது ஹைஃபாவை தாக்கியிருக்க முடியும். இஸ்ரேலின் அனைத்து பொருளாதார துறைமுகங்களையும் தாக்கியிருக்கலாம்.

‘ஆனால், எமது சிவப்புக் கோடுகள் பொது­மக்கள் ஆவர்இ இராணுவ நோக்கம் மாத்திரமே எம்மிடமிருந்தது’ என அவர் கூறினார்.

Share.
Leave A Reply