இஸ்ரேல், உக்ரைன் மற்றும் தாய்வானுக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்கும் 95 பில்லியன் டொலர் திட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் சட்டமாவதற்கு அடுத்த வாரம் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதோடு தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடனின் கையொப்பத்தை பெற வேண்டி உள்ளது.
இதில் ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 23 பில்லியன் டொலர் ஆயுதங்கள் உட்பட 61 பில்லியன் டொலர் உதவியும், 9 பில்லியன் டொலர் மனிதாபிமான தேவைகள் உட்பட இஸ்ரேலுக்கு 26 பில்லியன் டொலர் உதவியும், தாய்வான் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு 8 பில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமெரக்காவின் இந்த புதிய திட்டம் உலகெங்கும் பிரச்சினையை தீவிரப்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா எச்சரித்துள்ளார்.
இதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலுக்கு இராணுவ உதவியாக மொத்தம் 13 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உதவி இஸ்ரேலின் அயர்ன் டோர்ம் வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த வழங்கப்படவுள்ளது.